வாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.!
மேலும் இந்த புதிய வசதியுடன் சேர்த்து மியுட் பட்டன் வழங்கப்பட இருக்கிறது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை செயல்படுத்தி வந்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் பயனர்களுக்கும் மார்க் ஆஸ் ரீட் என்ற ஆப்ஷன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்

நோட்டிஃபிகேஷன்
இந்த புதிய அம்சம் என்னவென்றால் உங்களுக்கு வரும் வாட்ஸ்ஆப் மெசேஜ் நோட்டிஃபிக்கேஷன்களில் ரிப்ளை ஆப்ஷனுடன் மார்க் ஆஸ் ரீட் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது. மேலும் பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு குறுந்தகவலை நோட்டிஃபிகேஷன் சென்டரிலேயே படித்ததாக மார்க்க செய்ய முடியும்.

மியுட் பட்டன்
மேலும் இந்த புதிய வசதியுடன் சேர்த்து மியுட் பட்டன் வழங்கப்பட இருக்கிறது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மியுட் பட்டன் எவ்வாறு செயல்படும் என்றால் நோட்டிஃபிக்கேஷன் சென்டரில் இருந்தபடியே சாட்களை மியுட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்து.

குறுந்தவல்கள் போலியானதா
இதற்கு முன்பு போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப் க்ரூப்புகளில் அதிகம் பரப்பப்படும் குறுந்தவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் யனர்களுக்கு எச்சரிக்கை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி வலைத்தள லிங்க்:
இந்த புதிய வசதி பயனர்களுக்கு வந்ததும், வாட்ஸ்ஆப்-ல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்ஆப் சோதனை செய்யும் என்று கூறப்படுகிறது. பின்பு சோதனையில் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால் அந்த தகவல் சிவப்பு நிறத்தில் குறியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற குறியீடு:
சிவப்பு நிற குறியீடு பொறுத்தவரை பயனர்கள் குறிப்பிட்ட வலைதளம் போலியானதா, அதில் இருந்து மற்ற போலி வலைத்தளங்களுக்கு ரீடைரக்ட் செய்யப்படும் என்று பயனர்கள் புரிந்துகொள்ள முடியும்.

வாட்ஸ்ஆப் பீட்டா 2.18.204 வெர்ஷன்:
தற்சமயம் வாட்ஸ்ஆப் பீட்டா 2.18.204 வெர்ஷனில் காணப்பட்டு இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு மூன்றாம் தரப்பு லின்க்-களும் மால்வேர் நிறைந்த வலைதளத்துக்கான முவரியைக் கூட முடக்க முடியும் என்று கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications