Block செய்வதில் இருந்தும்.. Block செய்யப்படுவதில் இருந்தும் விடுதலை.. WhatsApp-க்கு வந்தது புது வசதி!
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம், தனது மொபைல் ஆப்பில் ஒரு பிரத்யேக லாக்-அவுட் வசதியை (Log-out Feature) உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்துள்ள சாமீபத்திய அறிக்கையின்படி, பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்ம் ஆன வாட்ஸ்அப் ஒரு புதிய வசதியை சோதித்து வருகிறது.
அது வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யாமலோ அல்லது தங்களின் சாட்களை இழக்காமலோ, பயனர்கள் தங்கள் அக்கவுண்ட்களிலிருந்து வெளியேற அனுமதிக்கிறது. இது வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இழக்காமல், அதே சமயம் வாட்ஸ்அப்பில் இருந்து கொஞ்சம்விலகி இருக்க விரும்புவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பிளாக் செய்வது, பிளாக் செய்யப்படுவது போன்ற விஷயங்களால் துவண்டு போனவர்களுக்கு பெரிய நிம்மதி அளிக்கும் அம்சமாக இருக்கும் .

இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்ர்களுக்கு கிடைக்கிறது, மேலும் இது காலப்போக்கில் பரவலாக வெளியிடப்படலாம். பிரத்யேக சைன்-அவுட் வசதியை வழங்கும் பெரும்பாலான மெசேஜிங் மற்றும் சமூக ஊடக தளங்களை போலல்லாமல், வாட்ஸ்அப்பில் பாரம்பரியமாக லாக்-அவுட் வசதி இருந்ததில்லை. இதுவரை, ஒரு டிவைஸில் இந்த சேவையிலிருந்து துண்டிக்க விரும்பும் பயனர்கள் ஆப்பை நீக்க வேண்டியிருந்தது, இதனால் அவர்கள் பின்னர் எல்லாவற்றையும் மீண்டும் ரீசெட் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த புதிய அம்சம் ஒரு எளிமையான மற்றும் நெகிழ்வான மாற்றீட்டை வழங்குகிறது.
வாட்ஸ்அப் பில்ட்-இன் லாக்-அவுட் வசதி எவ்வாறு செயல்படும்? கிடைத்த அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தும் சில பயனர்கள், அக்கவுண்ட் செட்டிங்ஸ் மெனுவில் ஒரு புதிய "லாக் அவுட்" (Log out) விருப்பத்தை காணத் தொடங்கியுள்ளனர். இந்த விருப்பத்தை தேர்ந்தெடுப்பது, லோக்கல் ஆக சேமிக்கப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் அதே வேளையில், அக்கவுண்ட்டை டிவைஸில் இருந்து துண்டிக்கும் ஒரு வழிகாட்டப்பட்ட சைன்-அவுட் செயல்முறையை தொடங்குகிறது.
வழக்கமாக - ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யும் போது, அதைவிட்டு வெளியேறும் போது,. டிவைஸில் சேமிக்கப்பட்ட சாட் ஹிஸ்டரி, நோட்டிபிகேஷன் விருப்பத்தேர்வுகள் அல்லது லாக்-இன் தகவல்கள் நீக்கப்படும். புதிய வசதியின் கீழ் அப்படி நடக்காது. இதன் பொருள், பயனர்கள் முழு செட்டப் ப்ராசஸசையும் மீண்டும் செய்யாமல், பின்னர் ஆப்பிற்கு திரும்பி, மிக விரைவாக அணுகலை மீண்டும் பெற முடியும்.
வாட்ஸ்அப் லாக்-அவுட் அம்சம்: இது ஏன் முக்கியமானது? பல ஆண்டுகளாக, வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஆப்பில் இருந்து வெளியேறுவதற்கு நேரடி வழி எதுவும் இல்லை. மெசேஜிங்கிலிருந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க, தற்காலிகமாக அக்கவுண்ட்களை மாற்ற அல்லது ஒரு டிவைஸில் இருந்து டிஸ்கனெக்ட் ஆகா விரும்பும் எவரும், ஆப்பை முழுவதுமாக நீக்க வேண்டியிருந்தது.
லாக்-அவுட் வசதி இல்லாதது, குறிப்பாக குறுகிய காலத்திற்கு மட்டும் சேவையிலிருந்து விலகி இருக்க விரும்பும் பயனர்களுக்கு, இந்த செயல்முறையை சிரமமாக்கியது. இந்த புதிய அம்சம், ஆப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்வதில் உள்ள சிரமத்தை குறைப்பதோடு, கணக்கு நிர்வாகத்தையும் கணிசமாக எளிதாக்கக்கூடும்.
லாக்-அவுட் செய்வதற்கு முன் வாட்ஸ்அப் மாற்று வழிகளையும் வழங்குகிறது: லாக்-அவுட் செயல்முறையின் ஒரு பகுதியாக, பயனர்கள் வெளியேற தேவையில்லாமல் அவர்களின் கவலைகளை தீர்க்கக்கூடிய பல மாற்று வழிகளை வாட்ஸ்அப் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த பரிந்துரைகளில் ஒன்று, வாட்ஸ்அப்பின்மல்டி-அக்கவுண்ட் ஆதரவை எடுத்துக்காட்டுகிறது. இது பயனர்கள் ஒரே டிவைஸில் இரண்டு அக்கவுண்ட்கள் வரை இயக்கவும், தேவைப்படும்போது அவற்றுக்கு இடையில் மாறவும் அனுமதிக்கிறது.
பயோமெட்ரிக் அங்கீகாரம் அல்லது டிவைஸ் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி சாட்களுக்கான அணுகலை கட்டுப்படுத்தும் ப்ரைவஸி அம்சமான 'ஆப் லாக்' ஐ (App Lock) இயக்கவும் வாட்ஸ்அப் நிறுவனம் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. அதாவது பயனர்கள் வாட்ஸ்அப் தளத்திலிருந்து முழுவதுமாக துண்டிக்கப்படாமல், தொடர்ச்சியான அலெர்ட்களை தவிர்க்க நோட்டிபிகேஷன் செட்டிங்ஸ்-ஐ கஸ்டமைஸ் செய்யலாம் அல்லது சாட்களை பிளாக் செய்யலாம் என்றும் கிடைத்த அறிக்கை கூறுகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த அம்சம் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்கள் மூலம், குறைந்த எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுடன் மட்டுமே தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. பல வாட்ஸ்அப் பீட்டா அம்சங்களை போலவே, பரவலான கிடைக்கும் தன்மை சோதனை முடிவுகள் மற்றும் பயனர் கருத்துக்களை பொறுத்தது. இந்த வெளியீடு எதிர்பார்த்தபடி நடந்தால், வாட்ஸ்அப் இதை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க செய்வதா என முடிவு செய்வதற்கு முன்பு, வரும் வாரங்களில் அதிகமான பீட்டா பயனர்கள் இந்த அம்சத்தை பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications