கனவெல்லாம் பலிக்குதே.. க்ரூப்புக்கு 32 பேர்.. WhatsApp யூசர்களுக்கு வந்தது குட் நியூஸ்!
கிட்டத்தட்ட எல்லா சாட்களையும் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) வழியாக செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு க்ரூப் கால்-ஐ (Group call) தொடங்க மட்டும் உங்கள் மொபைலை எடுக்க வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால்.. விரைவில் இந்த நிலை இல்லாமல் போகலாம்.
ஏனென்றால் வாட்ஸ்அப் நிறுவனமானது தனது வெப் பிளாட்பார்மில் (web platform) க்ரூப் சாட்களுக்கான வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை சோதித்து வருகிறது. இந்த நடவடிக்கை, வெப் வெர்ஷனின் பயன்பாட்டு அனுபவத்தை மொபைல் ஆப்பின் அனுபவத்திற்கு மிக நெருக்கமாக மாற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் வெப்பின் சமீபத்திய பீட்டா (beta) வெர்ஷனில் இந்த புதிய அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வெப் வெர்ஷனில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை வாட்ஸ்அப் ஏற்கனவே சில காலமாக சோதித்து வந்தாலும், இந்த லேட்டஸ்ட் அப்டேட் ஆனது தனிநபர் உரையாடல்களை தாண்டி க்ரூப் சாட்களுக்கும் இந்த வசதிகளை விரிவுபடுத்துகிறது.
32 பேர் பங்கேற்க்கும் வாட்ஸ்அப் வெப் க்ரூப் கால்கள்: WABetaInfo-வின் சமீபத்திய அறிக்கையின்படி, சில பீட்டா பயனர்கள் இப்போது 32 பங்கேற்பாளர்கள் வரை கொண்ட க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கான ஆதரவை பெறுகிறார்கள். இந்த அம்சம் ஸ்க்ரீன் ஷேரையும் (Screen Share) ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த அப்டேட் - வாட்ஸ்அப் வெப்பை பிரத்யேக தகவல் தொடர்பு தளங்களுக்கு நெருக்கமாக கொண்டுவருகிறது.
இதன்கீழ் ஒரு கால்-ஐ தொடங்குவது எளிமையானதாக தெரிகிறது. பயனர்கள் ஒரு க்ரூப் சாட்டை திறந்து, கால் பட்டனை கிளிக் செய்து, வாய்ஸ்அல்லது வீடியோ கால்-ஐ தேர்ந்தெடுக்கலாம். மேலும் க்ரூப்பில் உள்ள அனைவரையும் அழைப்பதற்கு பதிலாக, ஒரு க்ரூப்பில் இருந்து குறிப்பிட்ட மெம்பர்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
இது ஒரு சிறிய கூடுதல் அம்சமாகதோன்றலாம், ஆனால் ஒரு உரையாடலில் ஒரு சிலரே சேர வேண்டிய பெரிய அலுவலக குழுக்கள், குடியிருப்பு சமூகங்கள் அல்லது விரிவான குடும்ப சாட்களில் இது பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் கால்களை போலவே, இந்த வெப் வெர்ஷனும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் மெட்டா (Meta) நிறுவனம் பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) ஆகியவற்றிற்கான சந்தா திட்டங்களை (subscription plans) அறிவித்த கையோடு, மெட்டா ஒன் (Meta One) என்பதன் கீழ் கட்டண திட்டங்கள் சோதிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
தற்போது, வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு (Android) ஆப்பில் மெட்டா ஒன் சந்தா திட்டங்களுக்கான ஆதரவை சேர்க்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், பயனர்கள் ஒரே சந்தா கட்டணத்தின் வாயிலாக மெட்டாவின் பல்வேறு ஆப்களில் உள்ள பிரீமியம் (Premium) அம்சங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும் இந்த தகவலின்படி, பயனர்கள் வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே நேரடியாக இந்த சந்தா திட்டத்தை பெறும் வசதியையும் வாட்ஸ்அப் உருவாக்கக்கூடும். மெட்டா ஒன் சேவையின் கீழ் மெட்டா ஒன் பிளஸ் (Meta One Plus) மற்றும் மெட்டா ஒன் பிரீமியம் (Meta One Premium) ஆகிய இரண்டு வகையான சந்தா திட்டங்களை மெட்டா நிறுவனம் வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மெட்டா ஒன் பிளஸ் மற்றும் மெட்டா ஒன் பிரீமியம் சந்தாக்களின் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்: WABetaInfo வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மெசேஜிங் பிளாட்பார்ம்தனது ஆண்ட்ராய்டு ஆப்பில் மெட்டா ஒன் சந்தா திட்டங்களை நேரடியாக சேர்க்கத் தயாராகி வருகிறது. ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.26.23.10-ல் இரண்டு புதிய மெட்டா ஒன் சந்தா திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த அப்டேட் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே நேரடியாக திட்டங்களை பெறவும், நிர்வகிக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது. இத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பதிவு செய்யும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus) நன்மைகள் அந்த தொகுப்பின் ஒரு பகுதியாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது; அத்துடன் ஒரே சந்தா மூலம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெட்டா ஏஐ (Meta AI) ஆகியவற்றின் பிரீமியம் அம்சங்களையும் அவர்கள் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications