WhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா

|

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப்பை நிராகரித்து, சிக்னல் மற்றும் டெலிக்ராம் போன்ற வேறு மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களுக்கு மாறிவருகின்றனர். இதனால், இப்போது வாட்ஸ்அப் ஒரு பெரிய U-டர்ன் எடுத்துள்ளது. இதையெல்லாம் நாங்கள் செய்யமாட்டோம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

பிப்ரவரி 8-ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா?

பிப்ரவரி 8-ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா?

வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக முன்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால், ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக புதிய விதி ஒப்புதலுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க மார்ச் 15ம் தேதி இறுதி நாளாக இப்போது மாற்றப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் பயனர்களின் சாட் மற்றும் கால் அம்சங்கள் எப்போதும் போல் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறியுள்ளது.

புதிய அறிக்கை வெளியிட்ட வாட்ஸ்அப்

புதிய அறிக்கை வெளியிட்ட வாட்ஸ்அப்

அதன்படி பயனர்களின் தகவல்கள், செல்போன் நம்பர், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தனை என அனைத்து வாட்ஸ்அப் சர்வரில் சேகரித்து வைக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் வருத்தம் அடைந்த பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலியைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட்டர் வழியாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தினமும் 1 ரூபாய் தான் செலவு.. 365 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை தரும் ஒரே திட்டம்..தினமும் 1 ரூபாய் தான் செலவு.. 365 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை தரும் ஒரே திட்டம்..

சந்தேகம் வேண்டாம்.. 100 % பாதுகாப்பு உறுதி

சந்தேகம் வேண்டாம்.. 100 % பாதுகாப்பு உறுதி

அதில் புதிய ப்ரைவஸி அப்டேட் ஆனது நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிரும் மெசேஜ்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் கூறியுள்ளது. வெளிவந்த அறிக்கையின்படி, தனிப்பட்ட மெசேஜ்கள் தொடர்ந்து எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு 100 சதவிகித பாதுகாப்புடன் உங்கள் மெசேஜ்கள் காக்கப்படும் என்று வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் இதையெல்லாம் வேவு பார்க்காது

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் இதையெல்லாம் வேவு பார்க்காது

வாட்ஸ்அப் செயலியும், பேஸ்புக்கும் உங்களது தனிப்பட்ட மெசேஜை அணுகவோ அல்லது உங்களது அழைப்புகளை கேட்கவோ முடியாது. அதேபோல் நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்கிறீர்கள், யாருக்கு கால் செய்கிறீர்கள் என்கிற தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் சேகரிக்காது. குறிப்பாக நீங்கள் பகிரும் லோக்கேஷனை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பார்க்காது என்று தெளிவாகக் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Takes a Sudden U-Turn and Delays the Implementation of New Privacy Policy To March 15th : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X