இனி வாட்ஸ் ஆப்பில் வருது விளம்பரம் .!
இந்தியாவில் பெறும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதன் மூலம் ஏராளமான வீடியோக்கள் ,குறுந்தகவல்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை பரிமாறி வருகின்றனர். இது மக்களுக்கு பயனுள்ள ஊடமாக
இந்தியாவில் பெறும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதன் மூலம் ஏராளமான வீடியோக்கள் , குறுந்தகவல்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை பரிமாறி வருகின்றனர். இது மக்களுக்கு பயனுள்ள ஊடமாகவும் இருக்கின்றது.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேட்டஸ் பகுதிகளில் விளம்பரங்கள் வழங்கப்படலாம் என் தகவல் வெளியானது. தற்சமயம் வாட்ஸ் ஆப் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வணிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடத் துவங்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

வணிக மயமாகும் வாட்ஸ் ஆப்:
வணிகமயமாக்கும் முயற்சிகளின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மக்களை வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும். வாட்ஸ்ஆப்செயலியில் விளம்பரங்கள் வழங்குவது குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியான நிலையில், இதன் செயல்பாட்டுக்கு வரும் காலம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

25 கோடி பேர் பயன்படுத்தும் தளம்:
உலகம் முழுக்க வாட்ஸ்ஆப்செயலியை இதுவரை சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

24 மணி நேரத்தில் மறைவும்:
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புகைப்படம், எழுத்துக்கள், வீடியோக்கள், அனிமேஷன் ஜிஃப் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக மறைந்து போகும். தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள் ஃபேஸ்புக் விளம்பர அமைப்பின் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications