வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்-ல் விளம்பரங்கள்: ஓ மை காட்.!

அதன்படி உபெர் மற்றும் பல்வேறு ஏர்லென்ஸ் நிறுவனங்கள் உட்பட 100 நிறுவனங்கள் இந்த அம்சத்தை சோதனை செய்யதுவங்கியிருக்கின்றன.

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது, மேலும் இந்த செயலியைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று பல தகவல்கள் வெளிவந்தது, ஆனால் இந்த செய்திகள் வதந்தி என்று கூறப்பட்ட நிலையில் உண்மையாகவே கட்டணம் வசூலிக்க இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்-ல் விளம்பரங்கள்: ஓ மை காட்.!

பின்பு வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் வரும் குறுந்தகவலகளுக்கு 24மணி நேரம் கழித்து பதில் அனுப்பினால் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இன்று வந்த தகவலின் அடிப்படையில் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்க திட்டமிடுவதாகவும் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

கூடிய விரைவில் பேஸ்புக்கில் பயன்படுத்தும் சில சேவைகளுக்க கூட கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாட்ஸ்ஆப் செயலியை கூர்ந்து கவனித்தால், அதில் சில நிறுவனங்கள் உங்களை அனுக வாட்ஸ்ஆப் மூலம் அனுமதி கேட்டிருக்கலாம்.

கட்டணம்

கட்டணம்

இவ்வாறு சில விளம்பரங்கள் மூலம் பயனர்கள் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களுக்கு அழைப்பு விடுக்காமல், நேரடியாக நிறுவனங்களை வாட்ஸ்அப் மூலம் தங்களது சந்தேகங்கள் அல்லது புகார்களை தெரிவிக்க முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் கட்டணம்
வசூலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபெர்

உபெர்

அதன்படி உபெர் மற்றும் பல்வேறு ஏர்லென்ஸ் நிறுவனங்கள் உட்பட 100 நிறுவனங்கள் இந்த அம்சத்தை சோதனை செய்ய
துவங்கியிருக்கின்றன. இருந்தபோதிலும் புதிய ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் 2019 முதல் தெரிய ஆரம்பிக்கும் என கருதப்படுகிறது.

45கோடி மக்கள்

45கோடி மக்கள்

ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் விளம்பரங்கள் வருகின்றன, இந்நிலையி; வாட்ஸ்ஆப்பில் வரும் விளம்பரங்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. மேலும் உலகில் சுமார் 45கோடி மக்கள் இந்த வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பயன்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்ப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
WhatsApp Status might start showing ads soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X