வாட்ஸ்ஆப்பின் ஆண்ட்ராய்டு பதிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள்.!
மற்றொரு நாள், மற்றொரு புதிய அம்சம் என்றாகிவிட்டது வாட்ஸ்ஆப் பயனர்களின் மனநிலை. ஆம், சமீபத்தில் ஐஓஎஸ் பதிப்பிலான வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.18.30-ல் மூன்று புதிய அம்சங்கள் உருட்டப்பட்டன.
மற்றொரு நாள், மற்றொரு புதிய அம்சம் என்றாகிவிட்டது வாட்ஸ்ஆப் பயனர்களின் மனநிலை. ஆம், சமீபத்தில் ஐஓஎஸ் பதிப்பிலான வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.18.30-ல் மூன்று புதிய அம்சங்கள் உருட்டப்பட்டன. அறிவிக்கப்பட்ட புதிய அம்சங்கள் அனைத்துமே ஆண்ட்ராய்டு பயனர்களின் கடுப்பை கிளப்பின என்றே கூறலாம்.

ஏனெனில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால் புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கே முதலில் உருட்டப்படும். அதனை சமாதானம் செய்யும்படியான தகவலொன்று வெளியாகியுள்ளது.

68 நிமிடங்கள் அல்லது 4096 நொடிகள்.!
மிகவும் பிரபலமான "டெலிட் பார் ஆல்" அம்சத்தின் செய்லபடும் நேரத்தை (நம்ப முடியாத) 68 நிமிடங்கள் அல்லது 4096 நொடிகள் என்று நீட்டித்து அறிவிக்கப்பட்ட பின்னர் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய அம்சமென்று வாட்ஸ்ஆப் பீட்டா சோதனை தளத்தில் காணப்பட்டுள்ளது.

லாக் செய்ய பயனர்களை அனுமதிக்கும்.!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சத்தின் பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தின் பெயர் குறிப்பிடுவது போல, இது ரெகார்ட் பொத்தானை லாக் செய்ய பயனர்களை அனுமதிக்கும்.

ஆரம்பிக்கும் மற்றும் முடிக்கும் போது டாப் செய்தால் போதும்.!
அதாவது, பயனர்கள் இனி குரல் பதிவு செய்வதற்கு ரெகார்ட் பொத்தானை அழுத்திக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. ஆரம்பிக்கும் மற்றும் முடிக்கும் போது டாப் செய்தால் போதும்.

முன்னர் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் பரவியது.!
இதே அம்சம் கடந்த ஆண்டு ஐஓஎஸ் பயனர்களுக்கு பரவியது ஆனால் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கவில்லை, தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சமானதை எப்போது உருட்டப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த மாத இறுதிக்குள்.?
ஒரு சிறிய அம்சமாக இருப்பதால் இந்த மாத இறுதிக்குள் பீட்டா பதிப்பில் இணைக்கப்படலாம். அதன் பின்னர் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு உருட்டப்படலாம். இதற்கு முன்னர் ஐஓஎஸ் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு உருட்டப்பட்ட புதிய அம்சங்களை பொறுத்தமட்டில், டைம் மற்றும் லொகேஷன் ஸ்டிக்கர்ஸ் மற்றும் க்ரூப் உறுப்பினரை தேடும் ஒரு விருப்பம் ஆகியவைகள் ஆகும்.

புகைப்படங்கள் அல்லது வீடியோக்களில்
டைம் மற்றும் லொகேஷன் ஸ்டிக்கர்கள் வழியாக உங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களில் நேரம் மற்றும் இடம் சார்ந்த ஸ்டிக்கர்களை இணைக்க முடியும். நேரம் அல்லது இருப்பிட ஸ்டிக்கரைச் சேர்க்க மெசேஜ் பாக்ஸில் இருக்கும் ப்ளஸ் (+) ஐகான் உதவும்.

போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி
அதனை தொடர்ந்து போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி விருப்பத்தைத் தட்டவும், பின்னர் உங்கள் தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஊடக உள்ளடக்கத்தில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். அதன் டாப் பாரில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.

ஸ்டிக்கரை நீக்க வேண்டுமெனில்
பின்னர் உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவில் நேரம் அல்லது இருப்பிடம் சார்ந்த ஸ்டிக்கரை இணைக்கவும். இணைக்கப்பட்ட ஸ்டிக்கரை நீக்க வேண்டுமெனில், அதை வெறுமனே மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ள பின் ஐகானிற்கு (குப்பைத்தொட்டி) இழுத்தால் போதும்.

எளிமையான வழி
புதிய ஸ்டிக்கர்களுடன் இணைந்து, ஐபோன்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் க்ரூபில் குழு தகவல் சாளரத்தில் நேரடியாக ஒரு க்ரூப் மெம்பரை கண்டறிவதற்கான தேடல் விருப்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது க்ரூபில் உள்ள ஒரு நண்பருடன் தனிப்பட்ட சாட் செய்ய எளிமையான வழியை உண்டாக்கி கொடுக்கும்.


ஐஓஎஸ் 7.0 அல்லது அதற்கு பின்னர்
இந்த புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் பதிப்பானது ஆப்பிள் ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இது 154.9எம்பி அளவு கொண்டுள்ளது மற்றும் ஐஓஎஸ் 7.0 அல்லது அதற்கு பின்னர் வெளியான பதிப்புகளுக்கு இணக்கமாக இருக்கும். மேலும் பல வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ் பற்றிய உடனடி தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications