ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு குட் நியூஸ்; வாட்ஸ்ஆப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம்.!

சமீபத்திய வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிக்கை உண்மையாயின், ஆண்ட்ராய்டு தளத்திற்கான வாட்ஸ்ஆப்பில் மிக விரைவில் ஒரு புதிய வீடியோ அழைப்பு அம்சம் இணைக்கப்படும்

|

முன்னர் வெளியானதொரு வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிக்கையின்படி, வாட்ஸ்ஆப் செயலின் அடுத்த மேம்படுத்தல் பதிப்பான 2.17.430-ல் ஸ்பேம் செய்திகளை தடுக்குமொரு புதிய அம்சத்தினை இணைக்கும் நோக்கத்தில் வாட்ஸ்ஆப் பணியாற்றி வருகிறது என்பதையும், வாட்ஸ்ஆப்பின் பார்வேட் விருப்பத்தை பயன்படுத்தி ஸ்பேம் செய்திகளானது, பல தொடர்புகளுக்கு அனுப்ப்பட்டு வருகிற காரணத்தினால் அவைகளை தடுப்பதற்கான புதிய அம்சமாக அது திகழும் என்பதையும் அறிந்தோம்.

அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய அம்சங்களை இணைக்கும் - பேஸ்புக் நிறுவனதிற்கு சொந்தமான செய்தி பயன்பாடான - வாட்ஸ்ஆப்பில் மேலுமொரு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமொன்று இணையவுள்ளது. அதென்ன அம்சம்.? அது எப்போது உருட்டுப்படும்.? என்பதை விரிவாக காண்போம்.!

வாட்ஸ்ஆப் க்ரூப் கால்.!

வாட்ஸ்ஆப் க்ரூப் கால்.!

சமீபத்திய வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிக்கை உண்மையாயின், ஆண்ட்ராய்டு தளத்திற்கான வாட்ஸ்ஆப்பில் மிக விரைவில் ஒரு புதிய வீடியோ அழைப்பு அம்சம் இணைக்கப்படும். வாட்ஸ்ஆப் க்ரூப் கால் என்கிற பெயரை கொண்டுள்ள இந்த புதிய அம்சமானது வழக்கமான வீடியோ அழைப்பை போன்று பலருடன் ஒரே நேரத்தில் வீடியோ அழைப்பை நிகழ்த்த உதவும்.

அடுத்து வரும் நாட்களில்.!

அடுத்து வரும் நாட்களில்.!

இந்த புதிய அம்சமானது தற்போது சோதனை கட்டத்தில் உள்ளதென்றும் விரைவில் (அடுத்து வரும் நாட்களில்) உத்தியோகபூர்வ அறிவிப்பை நிகழ்த்தி மெல்ல மெல்ல அதன் பயனர்களுக்கு உருட்டப்படலாமென்றும் வெளியான அறிக்கை கூறுகிறது.

மிகவும் துல்லியமாக இருக்க அதிக வாய்ப்பு.!

மிகவும் துல்லியமாக இருக்க அதிக வாய்ப்பு.!

வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் சமீபத்திய அம்சங்களை சரிபார்க்கும் மற்றும் சோதிக்கும் ஒரு ரசிகர் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ (WABetaInfo) வலைத்தளம் மூலம் வெளியாகியுள்ள இந்த அறிக்கையானதும் பெரும்பாலன முந்தைய அறிக்கைகள் போலவே மிகவும் துல்லியமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

Oppo F5 Sidharth Limited Edition Unboxing (TAMIL)
பேஸ்புக் மெஸஞ்சர் வீடியோ அழைப்பில் பார்த்ததைப் போலவே.!

பேஸ்புக் மெஸஞ்சர் வீடியோ அழைப்பில் பார்த்ததைப் போலவே.!

இந்த க்ரூப் வீடியோ அழைப்பு அம்சம் வந்தவுடன், வாட்ஸ்ஆப் பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கும் மேலான நண்பர்களுடன் வீடியோ அழைப்பை செய்ய முடியும். அதாவது நாம் பேஸ்புக் மெஸஞ்சர் வீடியோ அழைப்பில் பார்த்ததைப் போலவே இந்த வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ அழைப்புகள் செயல்படலாம்.

அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இல்லை.!

அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இல்லை.!

அறியாதோர்களுக்கு, பேஸ்புக் தனது மெஸஞ்சரில் அதன் பயனர்களுக்கான க்ரூப் வீடியோ அழைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ அழைப்பு அம்சம் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரிரு நாட்கள் அல்லது அடுத்த மாதத்திற்குள்

ஓரிரு நாட்கள் அல்லது அடுத்த மாதத்திற்குள்

வாட்ஸ்ஆப் ஆனது க்ரூப் வீடியோ அழைப்பு அம்சத்தை சோதிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் அறிக்கை இதுவல்ல, ஏற்கனவே நிறைய அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இம்முறை - ஓரிரு நாட்கள் அல்லது அடுத்த மாதத்திற்குள் - இந்த அம்சம் உருட்டப்படுமென எதிர்பார்க்கலாம். மேலும் பல ஆப்ஸ் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருங்கள்.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு

ஸ்பேம் செய்திகளை தடுக்குமொரு புதிய அம்சத்தினை பொறுத்தமட்டில் வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோவின் படி, "இந்த அம்சமானது ஏற்கனவே பீட்டா பதிப்பில் கிடைக்கப்பெறுகிறது மற்றும் அது அதிகாரப்பூர்வமாக இயங்கவில்லை. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயங்குதளத்திற்கும் இந்த அம்சம் உருவாக்கப்படும்".

ஸ்பேம் செய்திகள் என்றால் என்ன.?

ஸ்பேம் செய்திகள் என்றால் என்ன.?

அறியாதோர்களுக்கு ஸ்பேம் செய்திகள் என்பது ஒரு பயனர், அவரின் மொத்த தொடர்புகளுக்கும் குறிப்பிட்டவொரு செய்திகளை மொத்தமாக அனுப்பவதே ஆகும்.

ஒரு தொடர்பிற்கு மட்டுமே அனுப்புவதில்லை

ஒரு தொடர்பிற்கு மட்டுமே அனுப்புவதில்லை

ஒரு ஸ்பேமர் ஆனவர், ஸ்பேம் செய்திகளை ஒரு தொடர்பிற்கு மட்டுமே அனுப்புவதில்லை, மாறாக பல பயனர்களை தொடர்பு பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து மொத்தமாக அனுப்புகிறார். இந்த தொடர்புகள் சார்ந்த விவரங்களை/ தரவுகளை இணையத்திலிருந்தோ அல்லது வேறு சில பதிவுச்சேவையிலிருந்தோ ஸ்பேமர்கள் எடுக்கிறார்கள்

வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் இருக்கும்

வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் இருக்கும்

இம்மாதிரியான ஸ்பேம் செய்திகளானது, தேவையற்ற விளம்பரம் மற்றும் போலி செய்திகளைக் கொண்டிருக்கலாம். குறிப்பாக பெரும்பாலான ஸ்பேம் செய்திகளானது உங்களின் தொடர்புகளுக்கும் பகிருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் இருக்கும்.

தடுப்பதற்கான புதியம் அம்சம்

தடுப்பதற்கான புதியம் அம்சம்

வாட்ஸ்ஆப்பின் பார்வேட் விருப்பத்தை பயன்படுத்தி இம்மாதிரியான ஸ்பேம் செய்திகளானது, பல தொடர்புகளுக்கு அனுப்ப்பட்டு வருகிற காரணத்தினால், அவைகளை தடுப்பதற்கான புதியம் அம்சம், வாட்ஸ்ஆப் பயன்பாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

பிராட்காஸ்ட் லிஸ்ட்

பிராட்காஸ்ட் லிஸ்ட்

தற்போது வரையிலாக பயனர் பல தொடர்புகளுக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்மென்றால், வாட்ஸ்ஆப் அதன் பிராட்காஸ்ட் லிஸ்ட் என்கிற அம்சத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றது, உங்கள் தொலைபேசி எண்ணில் உள்ள தொடர்புகள் பலவற்றிற்கு ஒரே நேரத்தில் செய்தியை அனுப்ப உதவும்.

Best Mobiles in India

English summary
WhatsApp spotted testing group video call feature for Android. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X