புத்தாண்டில் வாட்ஸ்அப் செய்த நம்ப முடியாத புதிய சாதனை.. பேஸ்புக் நிறுவனம் ரொம்ப ஹாப்பி..

|

உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2020 இறுதியில் சுமார் 1.4 பில்லியனுக்கும் அதிகமான வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளனர் என்று வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலை நிறுவனமான பேஸ்புக் தெரிவித்துள்ளது. கடந்த எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணத்தையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் புதிய சாதனை

வாட்ஸ்அப் புதிய சாதனை

வாட்ஸ்அப் மேடையில் ஒரே நாளில் மிக அதிகமாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் பதிவாகியுள்ளது என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. புத்தாண்டு ஈவ் கொண்டாட்டத்தை முன்னிட்டு எப்போதுமே பேஸ்புக்கின் தளங்களிலும் பயன்பாட்டிலும் பெரிய ட்ராபிக் நெரிசலை நிறுவனம் ஆண்டுதோறும் கூர்மையாக கவனித்து வருகிறது. COVID-19 தொற்றுநோய் காரணமாக கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவெளி காரணமாக இந்த புதிய பதிவுகள் பதிவாகியுள்ளது.

50 சதவீதத்திற்கும் அதிகமான பதிவு

50 சதவீதத்திற்கும் அதிகமான பதிவு

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தை இதே நாளோடு ஒப்பிடும்போது, வாட்ஸ்அப் அழைப்பு கணக்குகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது என்று சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் பிற சேவைகளான இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவையும் புத்தாண்டு ஈவ் 2020 இல் பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!

குழு வீடியோ அழைப்பு எண்ணிக்கை கூட அதிகமா?

குழு வீடியோ அழைப்பு எண்ணிக்கை கூட அதிகமா?

பேஸ்புக்கின் வலைப்பதிவு இடுகையின் படி, அமெரிக்காவில் 3க்கு மேற்பட்ட நபர்களுடன் மேற்கொள்ளும் மெசஞ்சர் குழு வீடியோ அழைப்புகள் நியூ இயர் இரவின் போது மிகப் பெரிய எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. சராசரி நாளோடு ஒப்பிடும்போது சேவைக்கான எண்ணிக்கை புத்தாண்டு தினத்தன்று கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது. பண்டிகை தினத்தன்று மெசஞ்சரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட AR பில்டர் 2020 Fireworks ஆகும்.

சமூக நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்ட மக்கள்

சமூக நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்ட மக்கள்

இதுவரை, அனைத்து புத்தாண்டின் இரவு நேரங்களும் பேஸ்புக் வரலாற்றில் பிஸியானதாகவே இருந்திருக்கிறது, ஆனால், இந்த ஆண்டு நம்ப முடியாத அளவிற்கு புதிய பதிவுகளை அமைத்துள்ளது. மக்கள் சமூக நலனைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தின் வசதிகளைப் பயன்படுத்தி அவர்களின் அன்பானவர்களோடு இணைந்து பாதுகாப்பாகப் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர் என்பதை இந்த கணக்கு எடுத்துரைக்கிறது என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?

55 மில்லியனுக்கும் அதிகமான நேரடி ஒளிபரப்பு

55 மில்லியனுக்கும் அதிகமான நேரடி ஒளிபரப்பு

புத்தாண்டை முன்னிட்டு உலகளவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் 55 மில்லியனுக்கும் அதிகமான நேரடி ஒளிபரப்புகளும் நிகழ்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. பேஸ்புக் இன்ஜினியரிங் குழு செய்த சில மேம்படுத்தல் காரணமாக மக்களுக்குக் கொண்டாட்ட தினத்தில் எந்த தொழில்நுட்ப சிக்கலும் ஏற்படாமல் நிறுவனம் பார்த்துக்கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும், இந்த ஆண்டு அனைவருக்கும் இனிதாய் துவங்கியுள்ளது என்று நம்புவோம்.

Best Mobiles in India

English summary
WhatsApp Sets New Record With 1.4 Billion Voice and Video Calls on New Years Eve 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X