Home
Apps

வாட்ஸ்ஆப் அப்டேட்: இனி மொத்தமாக மெஸேஜ் அனுப்புவதில் சிக்கல்.!

"இந்த அம்சமானது ஏற்கனவே பீட்டா பதிப்பில் கிடைக்கப்பெறுகிறது மற்றும் அது திகாரப்பூர்வமாக இயங்கவில்லை. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயங்குதளத்திற்கும் இந்த அம்சம் உருவாக்கப்படும்"

By Muthuraj

வாட்ஸ்ஆப் செயலின் அடுத்த மேம்படுத்தல் பதிப்பான 2.17.430-ல் ஸ்பேம் செய்திகளை தடுக்குமொரு புதிய அம்சத்தினை இணைக்கும் நோக்கத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பணியாற்றி வருகிறது.

வாட்ஸ்ஆப் அப்டேட்: இனி மொத்தமாக மெஸேஜ் அனுப்புவதில் சிக்கல்.!

வாட்ஸ்ஆப்பின் வரவிருக்கும் புதிய அம்சங்களை சோதிக்கும் ஒரு ரசிகர் வலைத்தளமான வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) படி, "இந்த அம்சமானது ஏற்கனவே பீட்டா பதிப்பில் கிடைக்கப்பெறுகிறது மற்றும் அது திகாரப்பூர்வமாக இயங்கவில்லை. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயங்குதளத்திற்கும் இந்த அம்சம் உருவாக்கப்படும்".

ஸ்பேம் செய்திகள் என்றால் என்ன.?

ஸ்பேம் செய்திகள் என்றால் என்ன.?

அறியாதோர்களுக்கு ஸ்பேம் செய்திகள் என்பது ஒரு பயனர், அவரின் மொத்த தொடர்புகளுக்கும் குறிப்பிட்டவொரு செய்திகளை மொத்தமாக அனுப்பவதே ஆகும்.

ஒரு தொடர்பிற்கு மட்டுமே அனுப்புவதில்லை

ஒரு தொடர்பிற்கு மட்டுமே அனுப்புவதில்லை

ஒரு ஸ்பேமர் ஆனவர், ஸ்பேம் செய்திகளை ஒரு தொடர்பிற்கு மட்டுமே அனுப்புவதில்லை, மாறாக பல பயனர்களை தொடர்பு பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து மொத்தமாக அனுப்புகிறார். இந்த தொடர்புகள் சார்ந்த விவரங்களை/ தரவுகளை இணையத்திலிருந்தோ அல்லது வேறு சில பதிவுச்சேவையிலிருந்தோ ஸ்பேமர்கள் எடுக்கிறார்கள்.

வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் இருக்கும்

வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் இருக்கும்

இம்மாதிரியான ஸ்பேம் செய்திகளானது, தேவையற்ற விளம்பரம் மற்றும் போலி செய்திகளைக் கொண்டிருக்கலாம். குறிப்பாக பெரும்பாலான ஸ்பேம் செய்திகளானது உங்களின் தொடர்புகளுக்கும் பகிருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் இருக்கும்.

தடுப்பதற்கான புதியம் அம்சம்

தடுப்பதற்கான புதியம் அம்சம்

வாட்ஸ்ஆப்பின் பார்வேட் விருப்பத்தை பயன்படுத்தி இம்மாதிரியான ஸ்பேம் செய்திகளானது, பல தொடர்புகளுக்கு அனுப்ப்பட்டு வருகிற காரணத்தினால், அவைகளை தடுப்பதற்கான புதியம் அம்சம், வாட்ஸ்ஆப் பயன்பாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

பிராட்காஸ்ட் லிஸ்ட்

பிராட்காஸ்ட் லிஸ்ட்

தற்போது வரையிலாக பயனர் பல தொடர்புகளுக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்மென்றால், வாட்ஸ்ஆப் அதன் பிராட்காஸ்ட் லிஸ்ட் என்கிற அம்சத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றது, உங்கள் தொலைபேசி எண்ணில் உள்ள தொடர்புகள் பலவற்றிற்கு ஒரே நேரத்தில் செய்தியை அனுப்ப உதவும்.

Best Mobiles in India

English summary
WhatsApp’s next update will let users prevent spam messages. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X