வாட்ஸ்ஆப் அப்டேட் : இனி வீடியோ கால் & சாட், இரண்டையும் ஒரே நேரத்தில் நிகழ்தலாம்.!

Written By:

வாட்ஸ்ஆப் அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான இரண்டு புதிய அம்சங்களை உருட்டியுள்ளது. ஒன்று பிக்சர்-இன் -பிக்சர் அம்சம் மற்றொன்று டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் அம்சம்.

வாட்ஸ்ஆப் : இனி வீடியோ கால் & சாட் இரண்டையும் ஒரே நேரத்தில் நிகழ்தலாம்

நினைவுபடுத்தும் வண்ணம் இந்த இரு அம்சங்களும் முந்தைய பீட்டா பயனர்களுக்கு கிடைத்திருந்தன, ஆனால் இப்போது வாட்ஸ்ஆப் இந்த இரு அம்சங்களையும் அதன் உறுதியான கட்டமைப்பிற்க்குள் அறிமுகம் செய்துள்ளது. அதன் தளத்தின் செயல்பாடுகளையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டுள்ள வாட்ஸ்ஆப் ஒவ்வொரு புதிய நாளிலும் பல புதிய அம்சங்களை உருட்டி வரும் நிலைப்பாட்டில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சம் நன்மைகளை கொண்டுள்ளது.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ அழைப்பு

பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ அழைப்பு

புதிய பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ அழைப்பு அம்சமானது பயனர்களை மல்டிடாஸ்க் செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் வீடியோ அழைப்புகளை செய்யும் அதே நேரத்தில் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்பவும் அனுமதிக்கும்.

வீடியோ கால் மற்றும் சாட் - இரண்டையும் ஒரே நேரத்தில் நிகழ்தலாம்

வீடியோ கால் மற்றும் சாட் - இரண்டையும் ஒரே நேரத்தில் நிகழ்தலாம்

உதாரணமாக, ஒரு பயனர் ஒரு வீடியோ அழைப்பில் இருக்கும் அதே சமயம் வேறு நண்பருடன் சாட் மூலம் பேச விரும்புகிறீர்கள் என்றால், அவர்கள் வீடியோ அழைப்பு திரையை எளிமையாக ரீசைஸ் செய்வதின் மூலம் சாட்டில் மற்றொரு வாட்ஸ்ஆப் நண்பரிடம் பேசலாம்.

எந்த மூலையிலும் இழுக்கப்படலாம்

எந்த மூலையிலும் இழுக்கப்படலாம்

ரீசைஸ் செய்த பிறகு, திரையின் அரட்டை பெட்டியின் பின்னணியில் இருக்கும்போது அதே சமயம் ​​திரையின் ஒரு பக்கத்தில் வீடியோ அழைப்பு தோன்றும். ரீசைஸ் செய்யப்பட்ட வீடியோ அழைப்பு பாக்ஸை திரையின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும், மேலும் அது தொலைபேசி திரையின் எந்த மூலையிலும் இழுக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட்

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட்

மற்றொரு புதிய அம்சமான டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆனது தற்போதுள்ள படங்கள் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை பகிர்வதைப் போல தான். ஆனால் இது ப்ரொபைல் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸில் இருந்து வேறுபட்டது. அதாவது 24 மணிநேரங்களுக்கு மட்டும் காட்சியளிக்கும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் போலவே, புகைப்படம் அல்லது வீடியோவிற்கு மாற்றாக டெக்ஸ்ட் அப்டேட் செய்து கொள்ளலாம்.

'பென்சில்' ஐகானைக் கிளிக் செய்யவும்

'பென்சில்' ஐகானைக் கிளிக் செய்யவும்

இதை நிகழ்த்த ஸ்டேட்ஸ் விருப்பத்தை டாப் செய்து திரையின் கீழே காட்டப்படும் 'பென்சில்' ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம், டெக்ஸட்டை உள்ளிடவும் என பயனர்களிடம் கேட்கப்படும்.

விருப்பமான பின்னணி வண்ணத்தையும் மாற்ற முடியும்

விருப்பமான பின்னணி வண்ணத்தையும் மாற்ற முடியும்

பின்னர் தேவையான டெக்ஸ்ட்டை உள்ளிடுவதோடு, பயனர்கள் விருப்பமான பின்னணி வண்ணத்தையும் மாற்ற முடியும். இந்த டெக்ஸ்ட் முன்தைய புகைப்படம் அல்லது வீடியோ ஸ்டேட்டஸ் போன்ற வேலை செய்யும், 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும், கிடைக்கபெறும் கமெண்ட் ஆனது ஒரு தனிப்பட்ட செய்தியாக உங்களுக்கு வரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
WhatsApp's new Picture-in-Picture feature let users video call & text message simultaneously. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot