பாதி உலகத்தை 'ஆளும்' வாட்ஸ்ஆப்.!!

By Meganathan
|

வாட்ஸ்ஆப் உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக அறியப்படுகின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் சிமிலர்வெப் நடத்திய ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. சிமிலர்வெப் நிறுவனம் டிஜிட்டல் சந்தையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமாக விளங்குகின்றது. அந்த வகையில் சிமிலர்வெப் நட்த்திய ஆய்வு முடிவில் உலகின் சுமார் 109 நாடுகளில் தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலி பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்திருக்கின்றது.

1

1

அதன் படி ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியானது இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு கருவிகளில் சுமார் 94.8% சதவீத கருவிகளில் வாட்ஸ்ஆப் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதாகவும், சராசரியாக சுமார் 37 நிமிடங்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுவதும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கின்றது.

2

2

சுமார் 187 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வாட்ஸ்ஆப் செயலியானது சுமார் 109 நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் சுமார் 55.6% ஆகும்.

3

3

இந்தியாவை தவிற வாட்ஸ்ஆப் செயலியானது பிரேஸில், மெக்சிகோ, ஐக்கிய ராஜ்ஜிம், ரஷ்யா மற்றும் பல்வேறு தென் அமெரிக்க நாடுகளில் பிரபலமாக இருக்கின்றது.

4

4

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசன்ஜர் செயலி இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இச்செயலியானது சுமார் 49 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் அடங்கும்.

5

5

மெசன்ஜர் செயலிக்கு அடுத்தப்படியாக வைபர் குறுந்தகவல் செயலி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த செயலியானது சுமார் 10'க்கும் அதிகமான நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

6

6

வைபர் செயலி கிழக்கு ஐரோப்பா, பெலராஸ், மால்தோவா, உக்ரைன் போன்ற நாடுகளில் அதிக பிரபலமாக இருக்கின்றது.

7

7

உக்ரைன் நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த ஆண்ட்ராய்டு கருவிகளில் சுமார் 65% கருவிகளில் வைபர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தினசரி அடிப்படையில் சராசரியாக சுமார் 16 நிமிடம் வைபர் பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

8

8

இதோடு ஈராக், லிபியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் வைபர் பிரபலமாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Whatsapp 'Rules' Over Half Of The World. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X