Home
Apps

Whatsapp இல் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது? ஈஸி டிப்ஸ்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கான புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்களை தற்பொழுது வெளியிடத் தொடங்கியுள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டில் உள்ள ஸ்டிக்கர் ஷாப்பில் வழக்கமான ஸ்டிக்கர் பேக்களுடன் இப்பொழுது இந்த புதிய அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளலாம்.

புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்

புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்

வாட்ஸ்அப் இரண்டிலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அனிமேஷன் ஸ்டிக்கர் பட்டியலில் ரிக்கோவின் ஸ்வீட் லைஃப், பிளேஃபுல் பியோமாரு, பிரைட் டேஸ், மூடி ஃபுடீஸ் மற்றும் சம்மி சம் சம்ஸ் ஆகிய அனிமேட்டட் ஸ்டிக்கர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆதரவு மட்டுமின்றி டெஸ்க்டாப் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப்பிற்கும் வெளியாகியுள்ளது.

சமீபத்திய அப்டேட்

வாட்ஸ்அப் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அனைவருக்கும் இந்த சேவை வெளியிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்டிக்கர் பேக்குகளை பயன்படுத்த முதலில் நீங்கள் சமீபத்திய அப்டேட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு v2.20194.16 வெர்ஷன் மற்றும் iOS v2.20.70 வெர்ஷனில் கிடைக்கிறது. புதுப்பிக்கப்பட்டதும், அரட்டையின் கீழே உள்ள ஈமோஜி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் அரட்டையைத் திறந்து ஸ்டிக்கர்கள் பகுதிக்குச் செல்லுங்கள்.

எப்படி வாட்ஸ்அப் அனிமேஷன் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவது?

எப்படி வாட்ஸ்அப் அனிமேஷன் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவது?

உங்கள் வாட்ஸ்அப் சாட்டில் உள்ள சாட் டேபை ஓபன் செய்து, கீழே உள்ள ஈமோஜி ஐகானைக் கிளிக் செய்யுங்கள்.
திரையின் முடிவில் காணப்படும் ஸ்டிக்கர்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஸ்டிக்கர்கள் பிரிவின் தீவிர வலதுபுறத்தில் உள்ள '+' ஐகானைக் கிளிக் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்வது அவசியம்

பதிவிறக்கம் செய்வது அவசியம்

  • வாட்ஸ்அப்பின் ஸ்டிக்கர்ஸ் ஸ்டோரைத் திறந்து, ஆல் ஸ்டிக்கர்கள் பட்டியலில் பிளே ஐகானுடன் இருக்கும் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்யுங்கள்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட அனிமேட்டட் ஸ்டிக்கர்கள் உங்களுடைய மை ஸ்டிக்கர் பிரிவில் சேர்க்கப்படும்.
  • இனி எப்பொழுதும் போல சாட்டில் நீங்கள் ஸ்டிக்கர் அனுப்புவது போல இந்த அனிமேட்டட் ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp Rolls Out New Animated Stickers Support For Both Android And iOS : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X