Home
Apps

ஆண்ட்ராய்டில் ஏகப்பட்ட அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த வாட்ஸ்ஆப்.!

வாட்ஸ்ஆப் போன்றே பல இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் இருந்தும் கூட, அவைகளால் வாட்ஸ்ஆப்பை நெருங்க கூட முடிவதில்லை.

By Muthuraj

வாட்ஸ்ஆப் போன்றே பல இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் இருந்தும் கூட, அவைகளால் வாட்ஸ்ஆப்பை நெருங்க கூட முடிவதில்லை. அது ஏன் என்று தெரியுமா.? - ஏனெனில் வாட்ஸ்ஆப் அதன் பயனர்களுக்கு என்ன வேண்டும்.? எது தேவையில்லை.? என்பது சார்ந்த யூசர் இன்டர்பேஸில், யாரைவிடவும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஆண்ட்ராய்டில் ஏகப்பட்ட அம்சங்கள்; சத்தமின்றி வேலை பார்த்த வாட்ஸ்ஆப்.!

அதன் வெளிப்பாடே - வாரா வாரம் ஒரு புதிய அம்சத்தினை அறிமுகம் ஆகிறது. அப்படியாக இன்று, ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சத்தமில்லாமல் உருட்டப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் அம்சம் என்ன.? அதன் நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அனுமதிக்கிறது.!

மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அனுமதிக்கிறது.!

சமீபத்தில் வெளியான பெரும்பாலான அம்சங்களை போன்றே, இம்முறையும் வாட்ஸ்ஆப் க்ரூபில் தான் ஒரு புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஒரு க்ரூப் மெம்பருக்கு ஒரு மேலோட்டமான மற்றும் கூர்மையான பார்வையை வழங்குகிறது. அதாவது, க்ரூப்பில் தன் பெயரின் கீழ் நிகழ்ந்துள்ள மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அனுமதிக்கிறது. இது எப்படி வேலை செய்யும் என்பது பற்றிய விளக்கம் இல்லை. இருப்பினும் மென்ஷன்களை ஸ்க்ரோலிங் செய்யும் பட்டன் எதாவது இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தேடல்" விருப்பம் வழியாக.!

உடன் சாட் விண்டோவில் மிதக்கும் "@" விருப்பத்தை அணுகுவதின் வழியாக, ஒருவர் மிக எளிமையாக க்ரூப் மெசேஜ்களை அணுக முடியும். கூடுதலாக, க்ரூப்பிற்குள் கிடைக்கும் "தேடல்" விருப்பம் வழியாக, எந்தவொரு பயனரின் ப்ரொபைல் விவரத்தையும் அணுக முடியும் அம்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் க்ரூப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொதுவான அப்டேட்ஸ்களை தவிர, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன்.!

ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன்.!

அதாவது, க்ரூப்பை விட்டு வெளியேற்றப்பட்ட நபர்களை மீதும் சேர்ப்பது சார்ந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக காணாமல் போன ஒரு அம்சமாக இருந்த இந்த ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன் ஆனது ஸ்பேமர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இது எப்படி செயல்படும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை. அதே சமயம், இது எவ்வளவு விரைவாக நமக்கு கிடைக்கும் என்பது சார்ந்த தகவலும் இல்லை.

நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.!

நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.!

சமீப காலமாக வாட்ஸ்ஆப் சில கடுமையான அம்சங்களை கொண்டு வருவது, பார்ப்பதற்கும் சரி, பயன்படுத்துவதற்கும் சரி மிகவும் நன்றாக இருக்கிறது. இது வாட்ஸ்ஆப் தளத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்பதோடு சேர்த்து நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். பேஸ்புக் நடத்திய சமீபத்திய டெவெலப்பரின் மாநாட்டில், க்ரூப் வீடியோ சாட் அம்சம் அறிவிக்கப்பட்டதும். அது பொது தளத்தில் மிக விரைவாக உருட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது.!

எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது.!

முன்னதாக, 'டெலிட் பார் எவ்ரிஒன்' அம்சம் மீதான குறிப்பிட்ட மாற்றம் அறிவிக்கப்பட்டது. இது மெசேஜை பெறுநர் காண்பதற்கு முன்னரே டெலிட் செய்யும் திறனை அனுப்புநருக்கு வழங்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மட்டுமே என்கிற காலக்கெடுவை கொண்டு அறிமுகமான டெலிட் அம்சம், பின்னர் 1 நாள் என்கிற மிக நீண்ட காலக்கெடுவை பெற்றது. இப்போது அது, ​​ஒரு மணிநேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலுடன் சேர்த்து, வாட்ஸ்ஆப்பில் சாட் பில்டர்ஸ் எனும் அம்சம் பற்றிய விவரமும் வெளியாகியுள்ளது.

சாட் பில்டர்ஸ் அம்சம்.!

சாட் பில்டர்ஸ் அம்சம்.!

இந்த தகவலானது வரப்போகும் அம்சங்களை பரிசோதிக்கும் தளமான, வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ வழியாக கிடைக்கப் பெற்றுள்ளது. வெளியான தகவலின் படி, கூறப்படும் புதிய சாட் பில்டர்ஸ் அம்சம் ஆனது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான பிஸ்னஸ் வாட்ஸ்ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பிஸ்னஸ் வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பெற்றுள்ள சாட் பில்டர்ஸ் அம்சமானது, நீண்ட நெடிய சாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மெசேஜை மிக விரைவாக தேடி கண்டுபிடிக்க அனுமதிக்கும். அதாவது பில்டர்ஸ் ஐகானை டாப் செய்ய, மூன்று தேடல் விருப்பங்கள் கிடைக்கும், அன்ரீட் சாட்ஸ், க்ரூப்ஸ் மற்றும் பிராட்கேஸ்ட் லிஸ்டஸ். அதன் வழியாக தேவையான மெசேஜை அணுகலாம்.

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்.!

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்.!

இது தவிர 2.18.84 வெர்ஷனில், வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதற்கு முன்னதாக, ரெஸ்ட்ரிக் க்ரூப் அம்சம் உருட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த அம்சமானது, ஸ்மார்ட்போனில் வேறு வேலைகளை பார்க்க முடியாத அளவிற்கு, (குறிப்பாக வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் போது) கடுப்பை கிளப்பும் க்ரூப் நோட்டிபிகேஷன்களுக்கு, ஒரு முடிவை கட்டியுள்ளது. எவரையும் எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும், வாட்சஆப் க்ரூப் நோட்டிபிகேஷன்களை கட்டுப்படுத்த உருட்டப்பட்டுள்ள அம்சம் தான் - ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் (Restrict Group) அம்சம். கடந்த சில வாரங்களாகேவ பேசப்பட்ட, இந்த அம்சமானது அட்மின்களுக்கே உரிய கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. அப்படி என்ன கட்டுப்பாடுகள்.?

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது.!

மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது.!

வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) தளம் கொடுத்துள்ள விளக்கத்தின் படி, கூறப்படும், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் டூல் ஆனது, க்ரூப் அட்மின்களை மட்டுமே மெசேஜ் செய்ய அனுமதிக்கும். அதாவது, க்ரூப்பின் இதர மெம்பர்களால், அட்மினின் மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது. யாரேனும், க்ரூப்பில் மெசேஜ் செய்ய விரும்பினால், அவர்கள் அட்மினை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த புதிய ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, எப்போது எந்தெந்த தளங்களில் உருட்டப்படும் என்பது பற்றிய வார்த்தைபால் இல்லை. ஆனால், நிச்சயமாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வரப்போகும் இந்த அப்டேட் உடன், வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் உட்பட பல பிரபலமான அம்சங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள், கோவூகுள் பிளே பீட்டா பதிப்பான, வாட்ஸ்ஆப் 2.18.210 வெர்ஷனில் காணப்பபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp Rolls Out New Update Making it Easier for Android Users to Check Group Mentions. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X