வாட்ஸ்ஆப்பில், மிகவும் பயனுள்ள இரண்டு புதிய அம்சங்கள் உருட்டல்.!
இந்த இரு அம்சங்களும் வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய பதிப்பைக் கொண்டிருக்கும் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் நிறுவனம், அதன் ஐஓஎஸ் பயனர்களுக்கான இரண்டு புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் உருட்டியுள்ளது. இந்த இரண்டு அம்சங்களில் ஒன்று, பயனர்கள் ஒரு யூட்யூப் வீடியோவை மெசேஜிங் பயன்பாட்டிலேயே பார்க்க அனுமதிக்கும். மறுகையில் உள்ள இரண்டாவது அம்சமானது, பயனர்களுக்கு வாய்ஸ் ரெக்கார்டை லாக் செய்ய அனுமதிக்கும்.

இந்த இரண்டு அம்சங்களையும் ஏற்கனவே பயனர்களை அடைந்திருக்கின்றன, ஆனால் அனைவருக்கும் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. உடன் இந்த இரு அம்சங்களும் வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய பதிப்பைக் கொண்டிருக்கும் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐஓஎஸ் 2.17.81 பதிப்பு
எனவே, உங்கள் ஐபோனில் இந்த அம்சங்களைப் பெறுவதற்கு - உங்கள் பயன்பாட்டை சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்த வேண்டும், அதாவது - ஐஓஎஸ் 2.17.81 பதிப்பிற்கு மாற்ற வேண்டும். இப்போது, இந்த புதிய அம்சங்கள் எவ்வாறு பணியாற்றும் என்பதைப் பார்ப்போம்.

அழுத்திக்கொண்டே இருக்க தேவையில்லை
வாய்ஸ் ரெகார்ட் லாக் அம்சமானது, அதன் பெயர் குறிப்பிடுவது போலவே, நீளமான வாய்ஸ் பதிவுகளை எளிமையான முறையில் ரெகார்ட் செய்ய அனுமதிக்கும். இனி வாய்ஸ் ரெகார்ட் மெசேஜிற்காக தொடர்ந்து ரெகார்ட் பொத்தானை அழுத்திக்கொண்டே இருக்க தேவையில்லை.

பதிவான பிறகு
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரெகார்ட் பொத்தானை லாங் ப்ரஸ் செய்து அதை மேல்நோக்கி ஸ்வைப் செய்ய வேண்டும். பதிவான பிறகு நீங்கள் அந்த செய்தியை அனுப்ப அம்புக்குறி ஐகானை கிளிக் செய்யலாம் அல்லது கேன்சல் செய்யலாம், அவ்வளவு தான். குறிப்பு: இந்த அம்சம் ஐஓஎஸ் 2.17.81 பதிப்பு கொண்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

பயன்பாட்டில் இருந்தபடியே யூட்யூப் வீடியோ
மற்றொரு புதிய அம்சமானது, வாட்ஸ் ஆப்பினுள் யூட்யூப் அணுகலை வழங்குகிறது. எளிமையான முறையில் கூறவேண்டுமெனில் நீங்கள் பயன்பாட்டில் இருந்தபடியே யூட்யூப் வீடியோவை பார்க்கலாம். உதாரணமாக, ஒரு நண்பர் உங்களுக்கு யூட்யூப் வீடியோவை அனுப்பி வைத்தால் - இந்த புதிய அம்சத்துடன் நீங்கள் பயன்பாட்டிலேயே நேரடியாக வீடியோவைப் பார்க்கலாம். குறிப்பிட்ட வீடியோவைப் பார்ப்பதற்காக யூட்யூப் பயன்பாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அடுத்து வரும் சில நாட்களில்
இந்த அம்சமானது, சமீபத்திய ஐஓஎஸ் 2.17.81 பயனர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூட, அப்டேட் செய்த பின்னரும் கூட எங்களுக்கு இந்த அம்சங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆக, இந்த அம்சங்கள் படிப்படியான முறையில் உருட்டப்படுவது போல் தெரிகிறது. இன்று இல்லாவிட்டாலும் கூட, அடுத்து வரும் சில நாட்களில் இந்த அம்சங்களை நீங்கள் பெறலாம்.

ஒரே நேரத்தில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு
இதற்கிடையில், ஐஓஎஸ் பயனர்களுக்கான மற்றொரு அம்சத்தை வாட்ஸ் ஆப் உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது, அந்த அம்சமானது ஒரு பயனர் ஒரே நேரத்தில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இடையே மாற முடியும் திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications