வாட்ஸ் அப் குருப் அட்மின்களுக்கு புதிய வசதி

By Siva
|

வாட்ஸ் அப் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஐஒஎஸ் பீட்டா 2.17.70 வெர்ஷனில் குருப் வாய்ஸ் கால் வசதி செய்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

வாட்ஸ் அப் குருப் அட்மின்களுக்கு புதிய வசதி

இந்த நிலையில் வாட்ஸ் அப்-இல் தற்போது மேலும் ஒரு புதிய வசதி விரைவில் வரவுள்ளது. இதன்படி தற்போது ஒரு குரூப்பில் உள்ள அட்மின் உள்பட அந்த குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ அல்லது வேறுசில மாற்றங்களோ செய்ய முடியும்.

ஆனால் இனிமேல் வரவுள்ள புதிய வெர்ஷனில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்த மாற்றம் பீட்டா வெர்ஷன் 2.17.387 மூலம் செயல்படுத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த இந்த "மேட்டர்" தெரிஞ்சா உங்க ஜியோ சிம் கார்ட்டை தூக்கி எரிஞ்சுடுவீங்க.!

இந்த புதிய வசதியின்படி இனிமேல் ஒரு வாட்ஸ் அப் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் அவர் விருப்பதிற்கு இணங்க மாற்றி கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ரசிகரின் கருத்துகளைக் கேட்டுத் தரப்படுகிறது. இந்த வசதி இனிமேல் வரப்போகும் வெர்ஷனில் மட்டுமே செயல்படும்

மேலும் வாட்ஸ்அப்பில் “Delete for Everyone” என்றபுதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வசதி தற்போது சோதனை வடிவில் இருப்பதாகவும் இந்த வசதி நடைமுறைக்கு வந்த பின்னர் அனுப்பிய மெசேஜ்களை எதிரில் இருப்பவர் படிப்பதற்கு முன்பாக அழித்துவிட முடியும் என்றும் இந்த மெசேஜ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்து வகையான மெசேஜ்களையும் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக திரும்பப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் மூலம் யூ.பி.ஐ பணப்பறிமாற்றத்துக்கும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வசதி வாட்ஸ் அப் பீட்டா 2.17.295 ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp is likely to roll out more features to group admins soon so that the management of the groups becomes simple.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X