வாட்ஸ்ஆப் பாதுகாப்பானதாக இருக்காது: வல்லுநர்களுக்கு பதில்.!
பயனர்களின் தனியுரிமை மற்றம் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் கூறினார்.
பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக
பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தை தொடர்ந்து
வாட்ஸ்ஆப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்சமயம் வாட்ஸ்ஆப் பற்றிய பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது, அதன்படி வாட்ஸ்ஆப் பாதுகாப்பானதாக இருக்காது என்ற வல்லுநர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். மேலும் இந்தியாவில் பல மல்லியன் மக்கள் இந்த வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்துகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
மேலும் வாட்ஸ்ஆப் தனது பயனர்கள் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை டிராக் செய்வது இல்லை என்று ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் சார்பாக வல்லுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்தும் சுமார் 20 கோடி பேரின் தகவல்கள் அறிவித்த அளவு பாதுகாப்பானதாக இருக்காது என்ற வல்லுநர்களின் கருத்துக்கு தற்சமயம் வாட்ஸ்ஆப் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களிடம் இருந்து குறைந்த அளவு தகவல்களை மட்டுமே சேகரிக்கிறது, மேலும் பயனர் பகிர்ந்து கொள்ளும் குறுந்தகவல்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

பயனர்களின் தனியுரிமை மற்றம் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் கூறினார். குறிப்பாக பயனர்களுக்கு இன்வைட் லிங்க அம்சம் போன்ற பல்வேறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஃபேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் குறைந்து இருக்கிறது, மேலும் பல்வேறு வலைதளங்களில் ஃபேஸ்புக் குறித்துமக்கள் மிகவும் வருத்தமான தகவல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தபோதிலும் வாட்ஸ்ஆப் மிகவும் பாதுகாப்பாக உள்ளது எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications