அடடே வாட்ஸ்ஆப்-ஐ விண்டோஸ் டெஸ்காப்பிலும் பயன்படுத்தலாம்.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி விரைவில் விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்ஆப் உருவாக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அடடே வாட்ஸ்ஆப்-ஐ விண்டோஸ் டெஸ்காப்பிலும் பயன்படுத்தலாம்.!

மேலும் தற்சமயம் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து விண்டோஸ் டெஸ்க்டாப் செயலியை உருவாக்கும் முயற்சியில் உள்ளன.

விண்டோஸ்

விண்டோஸ்

வாட்ஸ்அப்-ஆன யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம்(Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி:

வங்கி:

இண்டஸ் இண்டு மற்றும் கோடாக் வங்கிகள் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாறக்கூடிய சேவையை அறிமுகம் செய்துள்ளன, இந்த வாட்ஸ்ஆப் திட்டம் தற்சமயம் சோதனை சேவையாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு மக்களுக்கு இந்த திட்டம் பயன்படும் வகையில் இருக்கும்.

வாட்ஸ்ஆப்:

வாட்ஸ்ஆப்:

கோடாக் மற்றும் இண்டஸ் இண்டு வங்கிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் இனி வாட்ஸ்ஆப் மூலம் பெற முடியும். அதன்பின்பு வங்கி அதிகாரிகளுடன் சாட் செய்து வங்கி சார்ந்த பல்வேறு விவரங்கள் மற்றும் பல்வேறு சேவைகளை பெற முடியும்.

லேபெல்

லேபெல்

வங்கி சாந்த அம்சங்கள் மட்டும் இல்லாமல் வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, தற்சமயம் மெசேஜ்களை அடுத்தவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. இந்த அம்சம் புதிய பீட்டா (2.18.179) பதிப்பில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வேர்டு:

பார்வேர்டு:

இந்த புதிய அம்சம் மூலம் உண்மையான மெசேஜ்கள் மற்றும் பார்வேர்டு செய்யப்பட்ட மேசேஜ்கள் என எளிமையாக வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். பின்பு இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மிக எளிமையாக கான்டாக்ட்களை சேமிக்க உதவுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp reportedly planning to launch a dedicated Windows 10 desktop app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X