அம்பலம்: உங்கள் வாட்ஸ்ஆப் சாட்டை கண்காணிக்கும் மூன்றாவது கண்.!
இதில் வாட்ஸ்ஆப்பிற்கு இருக்கும் பங்கை விட, உங்களின் வாட்ஸ்ஆப் நண்பர்களுக்கே பங்கு அதிகம்.
பேஸ்புக் அக்கவுண்ட்களில் இருக்கும் தனிப்பட்ட விவரங்களை விட, வாட்ஸ்ஆப் வழியாக பகிரப்படும் தனிப்பட்ட விவரங்கள் மிக மிக அதிகம் என்பது வெளிப்படை. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா வழியாக அம்பலமான பேஸ்புக் நிறுவனத்தின் டேட்டா திருட்டையே இன்னும் ஜீரணிக்காத நிலைப்பாட்டில், பிரபல மெசேஜிங் பிளாட்பார்ம் ஆன வாட்ஸ்ஆப்பிலும் டேட்டா திருட்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஆப் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருந்தாலும் கூட, குறிப்பிட்ட ஆப் வழியாக தான் டேட்டா திருட்டு நிகழ்கிறது என்பதால் இதில் வாட்ஸ்ஆப்பிற்கு இருக்கும் பங்கை விட, உங்களின் வாட்ஸ்ஆப் நண்பர்களுக்கே பங்கு அதிகம்.

ஒரு பயனரின் சாட் நடவடிக்கை.!?
வெளியான அறிக்கையின் படி, சாட்வாட்ச் எனப்படும் ஒரு புதிய ஆப் வழியாக தான், நமது வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் வழியாக டேட்டா திருட்டு நிகழ்கிறது. குறிப்பிட்டுள்ள சாட்வாட்ச் ஆப் ஆனது ஒரு பயனரின் சாட் நடவடிக்கையை கண்காணிப்பதாக கூறப்படுகிறது.

எப்போது படுக்கைக்கு செல்கிறார்.?
இந்த சாட்வாட்ச் ஆப் ஆனது வாட்ஸ்ஆப்பின் ஆன்லைன் அல்லது ஆப்லைன் நிலையை கண்காணிக்கிறது. அதன் வழியாக ஒருவர் எத்தனை முறை வாட்ஸ்ஆப்பிற்குள் நுழைகிறார்.? ஒவ்வொரு நாளும் எப்போது தூங்க (படுக்கைக்கு) செல்கிறார் போன்ற மதிப்பீடுகள் நிகழ்த்தப்படுகின்றனவாம்.

உங்களுக்கே தெரியாமல்.!
இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால், உங்களின் வாட்ஸ்ஆப் ஆன்லைன் / ஆப்லைன் நிலையைப் பயன்படுத்தி, நீங்கள் வாட்ஸ்ஆப்பில் பேசுவதற்கு எப்போது தயாராக இருப்பீராகள் என்பதை உங்களுக்கே தெரியாமல் ஆராய்ந்து வைத்திருக்கும் இந்த சாட்வாட்ச் ஆப்.!

ப்ரைவஸி செட்டிங்ஸை 'ஆப்' செய்து வைத்திருந்தாலும் கூட.!
இதில் மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களின் ரீட் ரெசிப்ட் அல்லது லாஸ்ட் ஸீன் போன்ற கடுமையான ப்ரைவஸி செட்டிங்ஸை 'ஆப்' செய்து வைத்திருந்தாலும் கூட, சாட்வாட்ச் ஆப் வழியாக நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள் என்பது தான்.!

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.!
லைஃப்ஹேக்கர் வழியாக வெளியாகியுள்ள இந்த டேட்டா திருட்டு அறிக்கையின் படி, "சாட்வாட்ச் ஆப் ஆனது முதலில் ஐஓஎஸ் தளத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் கண்டறியப்பட்டு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. தற்போது சாட்வாட்ச் ஆப், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கிடைக்கிறது."

வெப் வெர்ஷன்.?
லைஃப்ஹேக்கர் அறிக்கையில் வெளியான மற்றொரு மோசமான தகவல் என்னவென்றால், சாட்வாட்ச் ஆப்பின், வெப் வெர்ஷனை உருவாக்கும் முனைப்பில் டெவலப்பர்கள் பணியாற்றி வருகிறார்களாம். அதே அறிக்கையில் "இந்த குறிப்பிட்ட ஆப்பை பிளாக் செய்யும் பணிகளை வாட்ஸ்ஆப் விரைவில் நிகழ்த்தும்" என்று கூறி ஆறுதல் அளிக்கிறது.

வாட்ஸ்ஆப் - இவ்வளவு பலவீனமானதா.?
மறுகையில், வாட்ஸ்ஆப்பின் எண்ட்- டூ- எண்ட் என்க்ரிப்ஷன் (end-to-end encryption), செயல்திறன் மிக்க ஒரு அம்சமாக உள்ளது. ஆக, வாட்ஸ்ஆப் வழியாக நிகழும் எந்தவொரு உரையாடலையும் மூன்றாவது நபரால் படிக்க முடியாது.


Click it and Unblock the Notifications