Home
Apps

Google Pay, PhonePe-க்கு குட்பை.. WhatsApp-க்கு உள்ளேயே மொபைல் ரீசார்ஜ் அம்சம் அறிமுகம்.. எப்படி செய்வது?

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் ஆப்பிற்கு உள்ளே இருந்தபடியே நேரடியாக மொபைல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஆனது, இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக இந்த செயல்பாட்டை அறிமுகப்படுத்த நெதர்லாந்தை சேர்ந்த ஒரு பேமெண்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

இது வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் ஆகிய இருவருக்கும் கிடைக்கும். இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் மூலம், ப்ரீபெய்ட் கனெக்ஷன்களை கொண்ட பயனர்கள், அவர்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்களை பார்த்து, வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே நேரடியாக தங்கள் மொபைல் ரீசார்ஜ்களை முடிக்க முடியும். இந்த தளம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் பயனர்கள் பில் கட்டணங்களை செலுத்தவும், மெட்ரோ டிக்கெட் முன்பதிவு செய்யவும் அனுமதிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

WhatsApp-க்கு உள்ளேயே மொபைல் ரீசார்ஜ் அம்சம் அறிமுகம்!

சில கிளிக்குகளில் ஜியோ, ஏர்டெல், வி ரீசார்ஜ்: இந்தியாவில் சேவையை (வாட்ஸ்அப் வழியிலான மொபைல் ரீசார்ஜ் அம்சத்திற்கான ஒருங்கிணைப்பை) செயல்படுத்த பேயு (PayU) உடன் இணைந்து செயல்பட்டதாக வாட்ஸ்அப் கூறுகிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் பலவிதமான ரீசார்ஜ் திட்டங்களிலிருந்து தேர்வுசெய்து, வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமலேயே சில கிளிக்குகளில் ரீசார்ஜ்களை முடிக்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி இந்த வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதை எளிதாக்குவதற்காக, வாட்ஸ்அப் ஹோம் ஸ்க்ரீனில் ரூபாய் (₹) ஐகான் சேர்க்கப்பட்டுள்ளது. கேமரா ஐகானுக்கு அருகில் இருக்கும் இந்த ஐகான், மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கும், பணம் அனுப்ப யுபிஐ-ஐ (UPI) பயன்படுத்துவதற்கும், பயனர்களை பணம் செலுத்தும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப்பில் ஆதரிக்கப்படும் மெட்ரோ டிக்கெட் சேவைகளுக்கான நுழைவாயிலாகவும் இது செயல்படுகிறது. தனிப்பட்ட உரையாடல்களிலும் ரூபாய் ஐகான் உள்ளது, இது பயனர்கள் மெசேஜ் அனுப்பும்போதே நேரடியாக பணம் அனுப்ப அனுமதிக்கிறது. சரி வாருங்கள் வாட்ஸ்அப்பில் ரீசார்ஜ் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்:

- ரூபாய் (₹) ஐகானை கிளிக் செய்யவும்
- மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜை (Mobile Prepaid Recharge) தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் நம்பரை கிளிக் செய்யவும் அல்லது நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் வேறொருவரின் நம்பரை உள்ளிடவும்.

- சர்வீஸ் ஆபரேட்டரை, அதாவது ஜியோ அல்லது ஏர்டெல் அல்லது வோடபோன் ஐடியா ஆகிய சேவைகளில் ஒன்றை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் மொபைல் ஆப்பரேட்டரிடமிருந்து பொருத்தமான திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் கட்டண முறையை (யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு) தேர்ந்தெடுக்கவும்.
- கட்டண செயல்முறையை முடிக்கவும்.

யுபிஐ பயனர்கள் தங்கள் யுபிஐ பின் நம்பரை உள்ளிட்டு பரிவர்த்தனையை அங்கீகரிக்கலாம். ரீசார்ஜ் செய்த பிறகு, வாட்ஸ்அப் திட்ட விவரங்களுடன் ஒரு உறுதிப்படுத்தல் ஸ்க்ரீனை காண்பிக்கும். பேமண்ட் ஹோம்பேஜின் கீழே உள்ள ஹிஸ்டரியில் இருந்து உங்களுடைய பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

சந்தா கட்டணம்: வாட்ஸ்அப் ஆனது 'வாட்ஸ்அப் பிளஸ்' (WhatsApp Plus) என்ற புதிய கட்டண சேவையை சோதிக்க தொடங்கியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. WABetaInfo வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது.

விரைவில் இது பரவலாக வெளியிடப்படும் என்றும், ஆப்பிள் பயனர்களுக்கான ஐஓஎஸ் ஆதரவும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனம் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் கட்டண அம்சங்களை சோதிக்க தொடங்கியுள்ளது, இப்போது வாட்ஸ்அப்பும் அதே பாதையை பின்பற்றுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் "வாட்ஸ்அப் பிளஸ்" அறிமுகப்படுத்தப்படும் விதத்தில்தான் முக்கிய வேறுபாடு உள்ளது: பயனர்கள் ஏற்கனவே இலவசமாக பெறும் அம்சங்களை மாற்றுவதற்கு பதிலாக, வாட்ஸ்அப் பிளஸ் ஆனது ஏற்கனவே உள்ள அம்சங்களுக்கு மேலான கூடுதல் மற்றும் பிரீமியம் அம்சங்களை கொண்டு வருகிறது. இது தொடர்பான இன்னும் விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவம்,

https://tamil.gizbot.com/apps/whatsapp-testing-whatsapp-plus-subscription-for-android-users-price-and-its-premium-features-068193.html

Best Mobiles in India

English summary
WhatsApp Prepaid Mobile Recharge Feature Introduced Jio Airtel Vi Users Directly Recharge within App How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X