Home
Apps

மாதம் ரூ.280 சந்தா கட்டணம்.. WhatsApp Plus சேவை அறிமுகம்.. சாதாரண வாட்ஸ்அப்பிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

வழக்கமான வாட்ஸ்அப் ஆப்பில் இல்லாத புதிய அம்சங்களை சந்தா கட்டணத்தின் கீழ் வழங்க உள்ளதாக கூறப்பட்ட.. டெக் ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட.. வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus) ஆனது, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு வெளியிடப்படுவதாக தெரிகிறது. இது முன்னதாக சோதிக்கப்பட்ட பீட்டா வெர்ஷனை (Beta version) போலல்லாமல், இது ஒரு ஸ்டேபிள் ரிலீஸ் (Stable release) என்றும் கூறப்படுகிறது.

சந்தா விலை என்ன? இது வழக்கமான ஆப்பிற்கு அப்பாற்பட்ட அம்சங்களை அணுகுவதற்கு சந்தா செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. WABetaInfo-வின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த சந்தா அடிப்படையிலான வாட்ஸ்அப் வெர்ஷன் தற்போது ஐரோப்பா மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது. ஐரோப்பாவில் இந்த சேவைக்கு மாதத்திற்கு €2.49 (ரூ.280) செலவாகும் என்றும், மெக்சிகோவில் உள்ள பயனர்கள் $29 (ரூ.2776) செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மாதம் ரூ.280 சந்தா கட்டணம்.. WhatsApp Plus சேவை அறிமுகம்!

வாட்ஸ்அப் VS வாட்ஸ்அப் பிளஸ் - என்ன வித்தியாசம்? வாட்ஸ்அப் பிளஸ், வழக்கமான வெர்ஷனில் உள்ள அதே முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும். இதில் சாட்கள், கால்கள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் ஆகியவைகள் அடங்கும். இருப்பினும், பிளஸ் சந்தாவானது பயனர் அனுபவத்தை மேலும் தனிப்பயனாக்குவதை (Personalize) நோக்கமாக கொண்டுள்ளது.

இதில் காண்டாக்ட்களுக்கான பிரத்யேக ரிங்டோன்கள், ஆப் ஐகான்கள், அனிமேஷன்கள், பிரீமியம் ஸ்டிக்கர்கள் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, வாட்ஸ்அப் பிளஸ் ஆனது பல பிரத்யேக காட்சி மேம்பாடுகளை (Exclusive visual enhancements) வழங்குகிறது. இதில் ஓவர்லே எஃபெக்ட்களுடன் கூடிய அனிமேஷன் ஸ்டிக்கர் பேக்குகள், 18 வண்ண அடிப்படையிலான ஆப் தீம்கள், மற்றும் எளிமையான, கலைநயமிக்க, மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகளை கொண்ட 14 மாற்று ஆப் ஐகான்கள் அடங்கும்.

இது, பயனர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாரம்பரிய பச்சை நிற வாட்ஸ்அப் லேஅவுட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இது தவிர, இந்த சந்தா சில உற்பத்தித்திறன் சார்ந்த அம்சங்களிலும் கவனம் செலுத்துகிறது. வாட்ஸ்அப் பிளஸ் சாந்தாவில் இணையும் பயனர்கள், கான்வர்ஷேஷன் லிஸ்ட்டின் மேலே 20 சாட்கள் வரை (முன்பு 3 ஆக இருந்தது) பின் (Pin) செய்யலாம். இது முக்கியமான தனிப்பட்ட மற்றும் க்ரூப் சாட்களை உடனடியாக அணுகுவதை எளிதாக்குகிறது.

மேலும், இந்த கட்டண பதிப்பானது, மேம்படுத்தப்பட்ட சாட் லிஸ்ட் மேனேஜ்மென்ட் டூல்களையும் அறிமுகப்படுத்துகிறது. இது, பயனர்கள் ஒரே ஆப்பில் - வேலை அல்லது குடும்பம் போன்ற சாட்களின் முழு பிரிவுகளுக்கும் - பகிரப்பட்ட தீம்ஸ், நோட்டிபிகேஷன் டோன்ஸ் மற்றும் ரிங்டோன் செட்டிங்ஸ்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. கடைசியாக, பிளஸ் சந்தாவானது சாதாரண போன் நோட்டிபிகேஷனில் இருந்து கால்களை தனித்து காட்ட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட 10 பிரீமியம் ரிங்டோன்களின் தொகுப்பையும் கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் பிளஸ் அது ஏற்கனவே கிடைக்கும் இலவச பதிப்பிற்கான ரீப்ளேஸ்மென்ட்-ஆ? வாட்ஸ்அப் பிளஸ் இன்னும் உலகளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. கட்டண சந்தாவின் கீழ் வரும் புதிய அம்சங்கள் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது, மேலும் வரும் வாரங்களில் இந்தியா உட்பட, இது பரவலான பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய மற்றும் மெக்சிகன் விலை நிர்ணயம் வெளியிடப்பட்டிருந்தாலும், அது பிராந்தியத்தை பொறுத்து கடுமையாக வேறுபடுவதை பார்க்க முடிகிறது. வாட்ஸ்அப்பின் இந்த பிரீமியம் திட்டம் முற்றிலும் விருப்பத்தேர்வு என்றும், சந்தாதாரர் அல்லாதவர்களுக்கு இது முக்கிய மெசேஜிங், காலிங் அல்லது தனியுரிமை அனுபவத்தை பாதிக்காது என்றும் வாட்ஸ்அப் குறிப்பிடுகிறது.

OPINION - யார் எல்லாம் வாட்ஸ்அப் பிளஸை கருத்தில் கொள்ள வேண்டும்? அறிவிக்கப்பட்ட விலை அமைப்பின் கீழ், அன்றாட தகவல்தொடர்புகளுக்கு இந்த மெசேஜிங் தளத்தை பெரிதும் சார்ந்திருக்கும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பிளஸ் ஈர்க்கக்கூடிய சேவையாக இருக்கலாம். இன்டர்பேஸை தனிப்பயனாக்குதல், தனிப்பயனாக்கப்பட்ட ரிங்டோன்கள் மற்றும் உற்பத்தித்திறன் சார்ந்த டூல்கள் உள்ளிட்ட அதன் கூடுதல் அம்சங்கள், ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்த உதவக்கூடும். இருப்பினும், சாதாரண பயனர்களுக்கு, வாட்ஸ்அப்பின் நிலையான இலவச பதிப்பே மிகவும் நடைமுறைக்கு உகந்த தேர்வாக இருக்கும். Photo Courtesy: WABetaInfo

Best Mobiles in India

English summary
WhatsApp Plus with new personalization tools launched for iPhone users Check Out Price Paid Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X