ஆபத்தை உண்டாக்கும் வாட்ஸ்அப் பின்க்: உஷார் மக்களே.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பிங்க் நிறத்தில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம் என கூறும் தகவல் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த தகவல் உடன் வாட்ஸ்அப் பின்க் நிறத்தில் பயன்படுத்த ஒரு இணைய முகவரியும் வழங்கப்படுகிறது.

 முகவரியை கிளிக்

மேலும் அந்த இணைய முகவரியை கிளிக் செய்ததும், ஸ்மார்ட்போனில் தீங்கு விளைவிக்கும் செயலி இன்ஸ்டால் ஆகிவிடும். அதாவது அவர்கள் கொடுத்துள்ள செயலியை இன்ஸ்டால் செய்தால் நமது விவரங்களை ஹேக்கர்கள் இயக்க முடியும் . குறிப்பாக இந்த போலியான செயலிக்கும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதைப் பற்றிய விவரங்களை சைபர் செக்யூரிட்டி

பின்பு இதைப் பற்றிய விவரங்களை சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா என்பவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ராஜசேகர் ராஜாரிய என்பவர் அந்த போலி செயலி வாட்ஸ்அப் இன்டர்பேஸ் கொண்டிருப்பதை உறுதிபடுத்தும் ஸ்கிரீன்ஷாட்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புக் பார்த்து எழுதலாம், இணையத்தையும் யூஸ் பண்ணலாம்: அண்ணா பல்கலை., அதிரடி அறிவிப்புஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புக் பார்த்து எழுதலாம், இணையத்தையும் யூஸ் பண்ணலாம்: அண்ணா பல்கலை., அதிரடி அறிவிப்பு

ந்த போலி செயலி மூலம் பயனர்களின்

அதாவது இந்த போலி செயலி மூலம் பயனர்களின் விவரங்களை சேகரிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் iOS பயனர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட் சில முக்கிய மேம்படுதல்களுடன் சில மீடியா மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, புதிய அப்டேட் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட மீடியா கோப்புகளின் காட்சியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் சாட்டில் வரும் மீடியா பிரெவியூவை பெரிய படமாக பார்க்கலாம். மேலும், சில அம்சங்களை நிறுவனம் இப்பொழுது வெளியிட்டுள்ளது, அதைப் பற்றிப் பார்க்கலாம்.

ஸ்ஸப்பியர் மெசேஜ் அம்சத்தில் சில

வாட்ஸ்அப்பில், டிஸ்ஸப்பியர் மெசேஜ் அம்சத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இப்போது வரை வாட்ஸ்அப் அட்மின் மட்டுமே கட்டுப்படுத்த முடிந்த இந்த அம்சத்தை, இந்த புதிய அப்டேட் மூலம் இனி குழுவில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் டிஸ்ஸப்பியர் மெசேஜ் அமைப்பைப் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், டிஸ்ஸப்பியர் போட்டோஸ் என்ற புகைப்படங்களின் அம்சத்தை அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களுக்குக் கொண்டு வரும் திறனை வாட்ஸ்அப் ஒரே நேரத்தில் ஆராய்கிறது.

 இந்த புதிய பு

இந்த புதிய புதுப்பிப்பு ஆப் ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ளது. IOS 2.21.71 பதிப்பிற்கான வாட்ஸ்அப் பயன்பாட்டின் நிலையான பதிப்பில் பயனர்களுக்கு இரண்டு புதிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. முதல் மாற்றம் பயனர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் திறக்காமல் எளிதாக பெரிய சைசில் காண உதவுகிறது. முந்தைய சிறிய சதுர பிரெவியூ முன்னோட்டத்தை விட இந்த முன்னோட்டம் மிகப் பெரியதாக இருக்கும்.

 க்கான வாட்ஸ்அப் 2.21.71 அப்டேட், மற்ற

மேலும், iOS க்கான வாட்ஸ்அப் 2.21.71 அப்டேட், மற்ற பங்கேற்பாளர்களுக்கு டிஸ்ஸப்பியர் மெசேஜ்களின் அமைப்பை இயல்புநிலையாக மாற்றும் திறனை மேலும் வழங்கியுள்ளது. முன்னதாக, நிர்வாகியால் மட்டுமே அதை இயக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது, ஆனால் இப்போது குழுவின் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் இந்த விருப்பம் திறக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆப் ஸ்டோரில் உள்ள சேஞ்ச்லாக், குழுத் தகவலைத் திருத்து மாற்றுவதன் மூலம் நிர்வாகிகள் அம்சத்தை அணுக முடியும் என்று கூறுகிறது.

வதால், எல்லா பயனர்களும் அ

ஆப் ஸ்டோர் வழியாக இந்த புதிய அப்டேட் வெளிவருவதால், எல்லா பயனர்களும் அவர்களின் பகுதியில் அப்டேட் கிடைத்தவுடன் விரைவாக அப்டேட் செய்துகொள்ள முடியும். நீங்கள் உடனடியாக புதுப்பிப்பைப் பெறவில்லை எனில், இது ஒரு கட்டமாக வெளியிடப்படுவதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், எனவே அப்டேட் உங்களுக்கு விரைவில் வந்து சேரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

காணாமல் போகும் டிஸ்ஸப்பியர்

வாட்ஸ்அப்பின் காணாமல் போகும் டிஸ்ஸப்பியர் மெசேஜ்கள் ஆண்ட்ராய்டு, iOS மற்றும் லினக்ஸ்-பேஸ் KaiOS சாதனங்களுக்குக் கடந்த ஆண்டு நவம்பரில் கிடைத்தன. இந்த அப்டேட் இப்போது இந்தியப் பயனர்களுக்கும் நேரலையில் உள்ளது. எவ்வாறாயினும், டிஸ்ஸப்பியர் மெசேஜ்கள் இயக்கப்பட்டதும், ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ அனுப்பப்படும் உரை ஏழு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.டிஸ்ஸப்பியர் மெசேஜ்களை இயக்குவதற்கு முன்பு நீங்கள் அனுப்பிய அல்லது பெற்ற மெசேஜ்களை இந்த அமைப்பு பாதிக்காது.

Best Mobiles in India

English summary
WhatsApp Pink targeting user details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X