அரசு அனுமதிக்காக காத்திருக்கும் வாட்ஸ்ஆப் பேமெண்ட் சர்வீஸ்.!

அரசு இதற்கு அனுமதி வழங்கியவுடன் பெரும்பாலான மக்கள் இச்சேவையை பயன்படுத்த ஆர்வமாக உள்ளதாகவே அறிகுறிகள் தென்படுகின்றன.

|

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப், இந்தியாவில் பேமெண்ட் சேவையை அறிமுகப்படுத்த பணியாற்றி வருவதாக கூறியுள்ளது. தற்போது இந்நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இச்சேவையை வழங்குவதற்காக இந்திய அதிகாரிகளிடம் இருந்து கீரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறது. வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த புதிய பேமெண்ட் வசதியை கடந்த சில மாதங்களாக பரிசோதனை செய்து வந்த நிலையில், தற்போது பரிசோதனை கட்டம் முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.

அரசு அனுமதிக்காக காத்திருக்கும் வாட்ஸ்ஆப் பேமெண்ட் சர்வீஸ்.!

இந்த சேவைக்கான ஒப்புதலை பெற வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்திய அரசின் தேசிய பேமெண்ட் ஆணையத்துடன்(NPCI -National Payment Corporation of India) இணைந்து பணியாற்றி வருகிறது. ஆனால் இந்திய அரசு இந்த பேமெண்ட் சேவையைப் பற்றி சிறிது கணிக்க இயலாமல் இருப்பது போல தெரிகிறது. வதந்திகளால் இந்தியா முழுவதும் நடைபெறும் ஏராளமான குழுப் படுகொலைகள் பற்றி வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் அரசு விரும்புகிறது.மேலும் இந்த மெசேஜிங் செயலி, வைரலாகும் மெசேஜ்களின் உண்மைதன்மையை வெளிப்படையாக்கும் வகையில் 'பார்வேர்டேடு'( 'forwarded') என்னும் குறியீட்டை சேர்த்துள்ளது.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

ஆனாலும் வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த பிரச்சனைக்காக துல்லியமான நடவடிக்கைகளை எடுக்கவும், புதிய பேமெண்ட் சேவை திட்டத்தை காட்டிலும் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் இந்திய அரசு விரும்புகிறது. ஆனால் இதிலுள்ள முக்கிய அக்கறை என்னவெனில், வாட்ஸ்ஆப் பேமெண்ட் சேவை தனது பயனர்களின் தகவல்களை ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு ஏற்ப எங்கு எப்படி சேமிக்கப்போகிறது என்பது தான்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்தியாவில் பயனர்களின் தளம் என்பது மிகப்பெரியது. இந்தியாவில் 200மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் உள்ளனர் மற்றும் அவ்வளவு அதிகமான தகவல்களை கவனக்குறைவாக சேமிப்பது மிகப்பெரிய இழப்பிற்கு வழிவகுக்கும்.

வாட்ஸ்ஆப் பேமெண்ட் சேவையானது, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி பயனர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறதா இல்லையா என சரிபார்க்குமாறு இந்திய தேசிய பேமெண்ட் ஆணையத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சேவை டெபிட்/கிரிடிட் கார்டின் கடைசி 6 இலக்க எண்கள் மற்றும் யூ.பி.ஐ பின் போன்ற அதிமுக்கியமான தகவல்களை சேமிப்பது இல்லை என உறுதியளிப்பதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் பதிலளித்துள்ளது. மேலும் இந்த பேமெண்ட் தகவல்கள் அதன் தலைமை நிறுவனமான பேஸ்புக்கால் பயன்படுத்தப்படமாட்டாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது இந்நிறுவனம்.

பேஸ்புக் தலைவர் மார்க்

பேஸ்புக் தலைவர் மார்க்

இது பற்றி பேஸ்புக் தலைவர் மார்க் சக்கர்பெர்க் கருத்து தெரிவிக்கையில், " மக்கள் ஒருவருக்கொருவர் பண அனுப்பிக்கொள்ள வாட்ஸ்ஆப் மிகவும் எளிமையான வழியை வழங்கி, நிதி சேர்த்தலுக்கு மிகப்பெரிய பங்களிப்பு அளிக்கிறது" என்கிறார்.

அரசு இதற்கு அனுமதி வழங்கியவுடன் பெரும்பாலான மக்கள் இச்சேவையை பயன்படுத்த ஆர்வமாக உள்ளதாகவே அறிகுறிகள் தென்படுகின்றன. அதேநேரம், இன்னும் அதிக மக்களுக்கு இந்த சேவையை வழங்கும் வகையில் மற்ற நாடுகளிலும் இதை கட்டமைப்பதில் கவனம் செலுத்துவதாக மார்க் கூறுகிறார்.

ஏன் வாட்ஸ்ஆப் பேமெண்ட் சேவை?

ஏன் வாட்ஸ்ஆப் பேமெண்ட் சேவை?

இந்தியாவில் ஏற்கனவே டெஸ், போன் பே, பீம், பேடிம் போன்ற பல யூ.பி.ஐ சேவை வழங்கும் செயலிகள் உள்ளன. ஆனால் அதில் பெரும்பாலான செயலிகளை பயன்படுத்த சற்று கடினமாகவே உள்ளது. தற்போது வாட்ஸ்ஆப் பேமெண்ட் சேவையும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. என்னதான் இது தனி செயலியாக இல்லாவிடிலும், மற்ற செயலிகளை போலவே செயல்படவுள்ளது.


கடந்த சில மாதங்களாக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்தது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்ற நிலையில், அந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த செயலியை எப்படி நம்புவது. இங்கு பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்த புதிய பேமெண்ட் சேவைக்கு இந்திய அரசு எப்போதுஅனுமதி வழங்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

English summary
WhatsApp payments service on hold as the platform awaits government's approval: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X