ஒருமுறை டவுன்லோட் செய்யப்பட்டு ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட மீடியா பைல்களை, மீண்டும் டவுன்லோட் செய்யும் புதிய அம்சத்தினை வாட்ஸ்ஆப் நேற்று அறிமுகம் செய்த்தது. அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு உருட்டப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தினை தொடர்ந்து மேலுமொரு புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் விருப்பத்தில் காணப்பட்டுள்ள ஒரு புதிய அம்சமானது, ஒரு பயனர் தங்கள் நண்பர்களிடமிருந்தும், மொபைல் தொடர்புகளிலிருந்தும் பணம் அனுப்பமாறு கோரிக்கைகளை நிகழ்த்த அனுமதிக்கும்.
ஒரு தனிப்பட்ட விருப்பமாகவே கிடைக்கப் பெறுகிறது.!
இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் 'ரெக்வெஸ்ட் மணி' என்கிற ஒரு தனிப்பட்ட விருப்பமாகவே கிடைக்கப் பெறுகிறது. இந்த அம்சத்தினை, வழக்கமான ஆண்ட்ராய்டு பதிப்பிலுள்ள பயனர்கள் பார்க்க முடியாது. இது ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.113-ல் காணப்படுகிறது.
இதை நிகழ்த்துவது எப்படி.?
வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் விருப்பத்தில் காணப்பட்டுள்ள ஒரு புதிய அம்சமானது, ஒரு பயனர் தங்கள் நண்பர்களிடமிருந்தும், மொபைல் தொடர்புகளிலிருந்தும் பணம் அனுப்பமாறு கோரிக்கைகளை நிகழ்த்த அனுமதிக்கும். இதை நிகழ்த்துவது எப்படி என்பது சார்ந்த எளிய வழிமுறைகளை காண்போம்.
பேமெண்ட்ஸ் > நியூ பேமெண்ட்ஸ்.!
வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ்-ல் காணப்படும் இந்த புதிய ரெக்வெஸ்ட் மணி அம்சம் வழியாக மொபைல் தொடர்புகளிலிருந்து பணம் கேட்பது எப்படி.? இதை நிகழ்த்த செட்டிங்ஸ் உள்நுழைந்து > பேமெண்ட்ஸ் > நியூ பேமெண்ட்ஸ் டாப் செய்யவும். பின்னர் உங்கள் தொடர்புகளின் பட்டியலை தொடர்ந்து, திரையின் மேல் வலது பக்கத்தில் யூபிஐ ஐடி அல்லது ஸ்கேன் க்யூஆர் கோட் விருப்பம் காட்சிப்படும்.அதில் ஒன்றை தேர்வு செய்யவும்.
ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன்.!
பின்னர் வாட்ஸ்ஆப், இரண்டு விருப்பங்களை காண்பிக்கும், அதாவது ரெக்வெஸ்ட் மணி அல்லது சென்ட் மணி டூ ஈச் அதர் என்கிற விருப்பங்கள் கிடைக்கும். ஒருமுறை பண பரிமாற்றத்திற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், உடனடியாக ஒரு பயனர் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட பணமானது வரவு வைக்கப்படும்.
பொதுவான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது கிடைக்கப்பெறும்.?
இதே போன்ற அம்சமானது, கூகிள் தேஸ், ஃபோன்பீ, பேடிம் போன்ற அனைத்து யூபிஐ அடிப்படையிலான பணம் செலுத்தும் பயன்பாடுகளிலும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சமானது பொதுவான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது கிடைக்கப்பெறும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.