வாட்ஸ்ஆப்: மிகவும் எதிர்பார்த்த பேமன்ட் வசதி வருகிறது.!
மேலும் விரைவில் மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த பேமன்ட் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்நது வாட்ஸ்ஆப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது, அதன்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி:
தற்சமயம் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும்
படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்டது என பேஸ்புக் நிறுவனம்.

விரைவில்:
மேலும் விரைவில் மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த பேமன்ட் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, குறிப்பாக இந்த வாட்ஸ்ஆப் பேமன்ட் வசதி இந்தியாவில் மிகப் பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் டெஸ், பேடிஎம்:
வாட்ஸ்ஆப் செயலியில் வரும் இந்த புதிய பேமன்ட் வசதி பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் போன்றவற்றிக்கு அதிக போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஆண்ராய்டு இயங்குதளங்களில் தான் இந்த புதிய அம்சம் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

200மில்லியன்:
இந்தியாவில் தற்சமயம் சுமார் 200மில்லியன் மக்கள் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த வருகின்றனர், மேலும் பேடிஎம் சேவையை
பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். மேலும் பேடிஎம் செயலியில் பாதுகாப்பு சார்ந்த புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே
இருக்கிறது, இந்நிலையில் வாட்ஸ்ஆப் பேமன்ட் சேவை வெளிவந்தால் மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அப்டேட்:
இப்போது வாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் என்னவென்றால் வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும்
வீடியோக்கள் என்பன மொபைலின் கேலரியில் காண்பிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications