இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.!
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் அனைத்து அம்சங்களும் பல்வேறு மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பேஸ்புக் நிறுவனம்
குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்த புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பின்பு பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கிலும், பயனாளர்களை கவரும் விதத்திலும் இந்த புதிய
அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.

வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்
அதன்படி ஏற்கெனவே சோதனையில் உள்ள ஒரு அப்டேட் தான் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ். குறிப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் பே சர்வீஸ், பேடிஎம் மறறும் கூகுள் போல செயல்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு கடந்த ஒரு வருடங்களாக சோதனை முயற்சியில் இருக்கும் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளதால், வாட்ஸ்ஆப் பணப்பரிவர்த்தனை நிச்சியம் பணம் அல்லாத பரிவத்தனையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டார்க் மோட் அம்சம்
மேலும்டார்க் மோட் அம்சம் ஆனது வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ளது, அது சார்ந்த அனைத்து ஸ்கிரீன் ஷாட்களும் வெளியான வண்ணம் உள்ளன. குறிப்பாக வாட்ஸ்ஆப் பீட்டாவில் வந்துவிட்டது என்றால், கூடிய விரைவில் பொது தளத்திற்கும் வரும் என்று தான் அர்த்தம்.

தீம் செட்டிங்ஸ்
வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ள டார்க் மோட் அம்சம் சார்ந்த தகவலை வாட்ஸ்ஆப் பீட்டா சோதனையாளர்ஆன WABetaInfo மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா
பதிப்பு 2.19.282 இல் தீம் செட்டிங்ஸ் எனப்படும் புதிய பிரிவு ஆப் செட்டிடிங்ஸ்-ல் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது வாட்ஸ்ஆப் தீம் செட்டிங்ஸ் பகுதியில் பயனர்கள் தேர்வு செய்ய மூன்று விருப்பங்கள் இருக்கும் என்றும்,அதில் ஒன்று லைட் தீம் (வெள்ளை) என்றும், இரண்டாவது டார்க் தீம் எனும் விருப்பம் இருக்கும், இது அனைவரும் எதிர்பார்த்த டார்க் மோட் அம்சம் ஆகும். மூன்றாவதாக சிஸ்டம் டீபால்ட் மோட் எனும் விருப்பம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயனர்கள் மூன்றாவது விருப்பத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் உங்களின் மெயின் மொபைல் செட்டிங் ஆனது டார்க் மோட் ஆக இருக்கும் பட்சத்தில், வாட்ஸ்ஆப் தானாகவே டார்க் மோடிற்கு மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுளள்து. பின்பு இப்போது ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் காணப்படும் இந்த அம்சத்தை பயனர்கள் டிவிட்டர் மற்றும் அனைத்து தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications