Whatsapp Pay இந்தியாவில் களமிறங்க தயார்; NPCI ஒப்புதல் கிடைச்சாச்சு! அடுத்தது என்ன?

|

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், அதன் டிஜிட்டல் பேமெண்ட் சேவையான வாட்ஸ்அப் பே சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யக் கடந்த இரண்டு வருடங்களாகப் பெரிதும் போராடி வருகிறது. ஒருவழியாக இப்பொழுது இந்தியாவில் அதன் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையைத் துவங்க NPCI ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒருவழியாக முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைச்சாச்சு

ஒருவழியாக முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைச்சாச்சு

வாட்ஸ்அப் ஒருவழியாக முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, அதன் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை இந்தியாவில் வெளியிடத் தயாராகிவிட்டது. வாட்ஸ்அப் அதன் யுபிஐ அடிப்படையிலான கட்டண சேவையை இயக்க தேசிய உரிமக் கழகம் (NPCI) ஒப்புதல் வழங்கியது என்று ரிசர்வ் வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் டிஜிட்டல் கட்டண சேவை

யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் டிஜிட்டல் கட்டண சேவை

எவ்வாறாயினும், வாட்ஸ்அப்-ன் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண சேவை ஒரு கட்டமாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி வாட்ஸ்அப் பே அம்சம் ஆரம்பத்தில் முதல் கட்டமாக சுமார் 10 மில்லியன் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதற்குப் பின் மிச்சம் உள்ள ஒப்புதல் வழங்கப்பட்டபின் அனைவருக்கும் வாட்ஸ்அப் பே வெளியிடப்படும்.

அம்மா நான் காலேஜ்-ல இருக்கேன், நான் உனக்கு பின்னாடி தான் இருக்கே.! கவிதாவை மாட்டிவிட்ட ஆப்அம்மா நான் காலேஜ்-ல இருக்கேன், நான் உனக்கு பின்னாடி தான் இருக்கே.! கவிதாவை மாட்டிவிட்ட ஆப்

இரண்டு வருடங்களாக போராடும் வாட்ஸ்அப்

இரண்டு வருடங்களாக போராடும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பே அம்சம் முதன்முதலில் பிப்ரவரி 2018ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கான சோதனை ஓட்டமாக, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பயனர்களுக்கு மட்டும் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், அரசாங்கத்திடமிருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் நிலுவையிலிருந்த காரணத்தினால், பேமெண்ட் சேவையை நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிட முடியவில்லை.

வாட்ஸ்அப் பேமெண்ட் தாமதத்திற்கு காரணம் இதுதான்

வாட்ஸ்அப் பேமெண்ட் தாமதத்திற்கு காரணம் இதுதான்

வாட்ஸ்அப் பே சேவை தாமதமாக முக்கிய காரணம், அரசாங்கம் அதன் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலை கொண்டது. இதனால் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் அதன் அனைத்து தரவையும் உள்நாட்டில் சேமிக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இதைச் செய்ய வாட்ஸ்அப் நிறுவனத்திற்குத் தாமதம் ஆனதால் பேமெண்ட் சேவை அறிமுகமும் தாமதமானது.

சத்தமின்றி கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!சத்தமின்றி கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

கூகிள் பே உடன் போட்டியிடும் வாட்ஸ்அப் பே

கூகிள் பே உடன் போட்டியிடும் வாட்ஸ்அப் பே

இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பதால், வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை சந்தையை பெரியதாக மாற்றும் என்று நம்புகிறது. இது ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகிள் பே, வால்மார்ட்டின் ஃபோன்பே, அலிபாபாவின் பேடிஎம் மற்றும் அமேசான் பே ஆகியவற்றுடன் நேரடியாகப் போட்டியிடும் என்று நம்பப்படுகிறது.

வாட்ஸ்அப் மெசேஜிங்-ல் இனி பேமெண்ட் செய்யலாம்

வாட்ஸ்அப் மெசேஜிங்-ல் இனி பேமெண்ட் செய்யலாம்

யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப்-ன் டிஜிட்டல் கட்டண முறை பயனர்கள், மற்றவர்களுக்குப் பணம் செலுத்த அல்லது தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப் பே பேமெண்ட் சேவை, வாட்ஸ்அப் மெசேஜிங் பயன்பாட்டிலேயே ஒருங்கிணைக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Pay Digital Payment Platform Gets Approved by NPCI To Launch In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X