செம்ம கடுப்பில் ஆண்ட்ராய்டு வாசிகள்; ஐபோன் பதிப்பில் சூப்பரான அம்சங்கள் உருட்டல்.!
பொதுவாக, அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால் புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கே முதலில் உருட்டப்படும். ஆனால் தற்போது ஐபோன் பயனர்களுக்கு அறிமுகமாகியுள்ளது.
இதை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்ஆப் செய்த துரோகம் என்றே கூறலாம். ஐஓஎஸ் பதிப்பான வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.18.30-ல் சமீபத்தில்.உருட்டப்பட்டுள்ள புத்தம்புதிய அம்சங்களை பற்றி அறிந்தால், ஒவ்வொரு ஆண்ட்ராய்டு பயனருக்கும் கடுப்பாக இருக்கும், இருக்கிறது.

பொதுவாக, அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால் புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கே முதலில் உருட்டப்படும். ஆனால் தற்போது ஐபோன் பயனர்களுக்கு அறிமுகமாகியுள்ளது.

டைம் மற்றும் லொகேஷன் ஸ்டிக்கர்ஸ்
இதன் மூலம் ஐஓஎஸ் பதிப்பில் பெரிய மாற்றங்கள் உருவாகியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் அம்சங்களை பொறுத்தமட்டில், டைம் மற்றும் லொகேஷன் ஸ்டிக்கர்ஸ் மற்றும் க்ரூப் உறுப்பினரை தேட ஒரு விருப்பமும் இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் அல்லது வீடியோக்களில்
டைம் மற்றும் லொகேஷன் ஸ்டிக்கர்கள் வழியாக உங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களில் நேரம் மற்றும் இடம் சார்ந்த ஸ்டிக்கர்களை இணைக்க முடியும். நேரம் அல்லது இருப்பிட ஸ்டிக்கரைச் சேர்க்க மெசேஜ் பாக்ஸில் இருக்கும் ப்ளஸ் (+) ஐகான் உதவும்.

போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி
அதனை தொடர்ந்து போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி விருப்பத்தைத் தட்டவும், பின்னர் உங்கள் தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஊடக உள்ளடக்கத்தில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். அதன் டாப் பாரில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.

ஸ்டிக்கரை நீக்க வேண்டுமெனில்
பின்னர் உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவில் நேரம் அல்லது இருப்பிடம் சார்ந்த ஸ்டிக்கரை இணைக்கவும். இணைக்கப்பட்ட ஸ்டிக்கரை நீக்க வேண்டுமெனில், அதை வெறுமனே மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ள பின் ஐகானிற்கு (குப்பைத்தொட்டி) இழுத்தால் போதும்.

எளிமையான வழி
புதிய ஸ்டிக்கர்களுடன் இணைந்து, ஐபோன்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் க்ரூபில் குழு தகவல் சாளரத்தில் நேரடியாக ஒரு க்ரூப் மெம்பரை கண்டறிவதற்கான தேடல் விருப்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது க்ரூபில் உள்ள ஒரு நண்பருடன் தனிப்பட்ட சாட் செய்ய எளிமையான வழியை உண்டாக்கி கொடுக்கும்.


ஐஓஎஸ் 7.0 அல்லது அதற்கு பின்னர்
இந்த புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் பதிப்பானது ஆப்பிள் ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இது 154.9எம்பி அளவு கொண்டுள்ளது மற்றும் ஐஓஎஸ் 7.0 அல்லது அதற்கு பின்னர் வெளியான பதிப்புகளுக்கு இணக்கமாக இருக்கும். மேலும் பல வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ் பற்றிய உடனடி தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications