Home
Apps

குரூப் அட்மின்களுக்கு இரண்டு புதிய அம்சங்களை வழங்கும் WhatsApp.! இனி "அதை" எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.!

வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் இரண்டு அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுவர இருக்கிறது.

அதாவது வாட்ஸ்அப் வெளியிட உள்ள அப்டேட் என்னவென்றால், உங்களது வாட்ஸ்அப் குரூப்களில் யார் யாரை இணைக்கலாம் விலக்கலாம் என்ற வசதியையும், உங்களது நண்பர்கள் எந்தெந்த குரூப்களில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

 குரூப் அட்மின்களுக்கு இரண்டு புதிய அம்சங்களை வழங்கும் WhatsApp.!

குறிப்பாக விரைவில் வெளியாகும் புதிய அப்டேட் மூலம் குரூப் அட்மின்கள் யார் யார் குரூப்-இல் இணைய முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். அதேபோல் இன்வைட் லின்க் அல்லது கம்யுனிட்டியுடன் க்ரூப்-ஐ இணைக்க செய்யும் போது, யார் க்ரூப்-இல் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மானிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஏதேனும் காண்டாக்ட் பெயரை கிளிக் செய்தால்,எந்த குரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்துகொள்ளவும் முடியும். சுருக்கமாக இந்த அம்சம் மூலம் மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் குரூப்களை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக வாட்ஸ்அப் வெளியிட உள்ள இந்த இரண்டு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் இந்த இரண்டு புதிய அம்சங்களும் வரும் வாரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. அதேபோல் ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத குழுக்களை ( வாட்ஸ்அப் குரூப்) எளிமையாக நீக்க ஒரு புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. குறிப்பாக இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மெமரியை சேமிக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

 குரூப் அட்மின்களுக்கு இரண்டு புதிய அம்சங்களை வழங்கும் WhatsApp.!

குறிப்பாக வாட்ஸ்அப் செயலி ஆனது டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இந்த தளத்தில் பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் பல்வேறு குழுக்களை உருவாக்கி தகவல்களைப் பரிமாறிக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் Expiring குரூப்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை Wabetainfo தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் மூலம் தான் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத வாட்ஸ்அப் குழுக்களை அடையாளம் கண்டு நீக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிறந்தநாள், திருமணம், ட்ரீட் போன்றவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் நினைவுபடுத்தும் விதமாக வாட்ஸ்அப் செயலியில் நாம் குழுக்கள் உருவாக்குவது உண்டு. அதன் தேவை முடிந்து பின்னர் அந்த குரூப் அப்படியே பயன்படுத்தப்படாமல் ஆக்டிவாக இருக்கும். ஆனால் அதில் எந்தவொரு மெசேஜும் இருக்காது. ஆனால் போனின் ஆப் ஸ்பேஸ் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும். அதை நீக்க தான் இந்த புதிய அம்சம் உதவும் குறிப்பிடத்தக்கது.

 குரூப் அட்மின்களுக்கு இரண்டு புதிய அம்சங்களை வழங்கும் WhatsApp.!

இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் எந்த தேதியில் அந்த குழுவை தாங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதனை நாள், வாரம், மாத கணக்கில் நிர்ணயிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழு காலாவதியாகும் தேதி வந்ததும் பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் வரும். குறிப்பாக இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp offers two new features for group admins:Check complete details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X