வாட்ஸ்ஆப்பை திறக்காமலேயே மெசேஜ் செய்யும் வழிமுறை வெளியானது; ஷாக் ஆகிப்போன பயனர்கள்.!

    மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் நிறுவனம், அதன் 1.5 பில்லியன் ஆக்டிவ் யூஸர்களுக்கு, எளிதான பயனர் அனுபவத்தை வழங்கும் முனைப்பின் கீழ், அவ்வப்போது புத்தம் புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் இணைத்த வண்ணம் உள்ளது.

    அதில் மிகவும் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன் மற்றும் இரண்டிற்கும் மேற்ப்பட்ட அட்மின்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்', பின்னர் உருட்டப்பட்ட 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சம், அந்த வரிசையில் கடந்த வெள்ளி அன்று வெளியான "ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்" (Restrict Group) அம்சம் ஆகியவைகளை கூறலாம். ஆனால் இம்முறை வெளியாகியுள்ள அம்சமானது, சற்றும் எதிர்பாராத ஒரு விசித்திரமான அம்சமாக உள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    வாட்ஸ்ஆப் ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவாகியுள்ளது.!

    ஆம், ​​பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாட்டு ஆனது 'wa.me' என்கிற ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவு ஆகியுள்ளது. வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WAbeta Info) வழியாக வெளியான அறிக்கையின்படி, api.whatsapp.com எனும் ஒரு குறுகிய டொமைன் வழியாக, மிக விரைவில் வாட்ஸ்ஆப் செயலியை திறக்க பயன்படுத்தப்படலாம்.

    இது எப்படி வேலை செய்யும்.?

    ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.18.138-ல் கிடைக்கும் இந்த அப்டேட்டின் பயன் என்னவென்று கேட்டால் : குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் செய்ய விரும்பும் பயனர்கள், https://wa.me/ என்கிற டொமைனை டைப் செய்தும் அதனுடன் மொபைல் எண்ணை இணைக்கவும். இதை நிகழ்த்த அவர்கள் தானாக குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். உதாரணமாக உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண் +91-9876543210 எனில் https://wa.me/919876543210 என டைப் செய்ய வேண்டும்.

    வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே.!

    ஒருவேளை, குறிப்பிட்ட டொமைன் உடன் தவறான வாட்ஸ்ஆப் நம்பரை டைப் செய்து சாட்டை திறக்க முயற்சித்தால், இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆனது, யூஆர்எல் வழியாக பகிரப்பட்ட தொலைபேசி எண் தவறானது என உங்களுக்கு அறிவிக்கும். இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே, குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ்ஆப் செய்ய முடியும் என்று அர்த்தம். இந்த இடத்தில் உங்களுக்கு சரியான தொலைபேசி எண்கள் நினைவில் இருக்க வேண்டும் என்பதை மனதிற்கொள்ளவும்.

    ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்

    இது தவிர, வாட்ஸ்ஆப் சமீபத்தில் அதன் பீட்டா பயனர்களுக்கு ஸ்டிக்கர் ஆல்பத்தை வெளியிட்டது என்பதும், இந்த ஸ்டிக்கர் அம்சமானது, சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அனைத்து பயனர்களுக்கம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் உருட்டப்பட்ட, "ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்" (Restrict Group) அம்சத்தினை பொறுத்தவரை, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினுக்கு, மெம்பர் ஒருவர் அனுப்பும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, புகைப்படங்களை, வீடியோக்களை,கிப் பைல்களை, டாக்குமெண்ட்ஸ்களை அல்லது வாய்ஸ் மெசேஜை கட்டுப்படுத்தும் சக்தியை வழங்குகிறது. எளிமையாக கூறவேண்டும் என்றால், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது க்ரூப்பின் மெம்பர்களை, முன் எப்போதும் இல்லாத அளவில் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.

    வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும்.!

    புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பொது தளத்திற்கு உருட்டும் முன்னர், அதை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும். இந்த ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, கடந்த 2017 டிசம்பரில் மாதத்தில் பரிசோதனை தளத்தின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு க்ரூப்பின் அனைத்து மெம்பர்களுக்கு,க்ரூப் டிஸ்க்ரிப்ஷன், ஐகான் மற்றும் சப்ஜெக்டை திருத்தும் அனுமதி இருந்தது. ஆனால் இனி அதை அட்மினால் மட்டுமே நிகழ்த்த முடியும் (குறிப்பாக க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரே ஒரு முறை மட்டுமே டவுன்லோட்.!

    முன்னதாக, வாட்ஸ்ஆப்பின் வழியாக நாம் டவுன்லோட் செய்யும் போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் ஆனது, டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை, வாட்ஸ்ஆப் சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும். ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் டெலிட் செய்யாத பட்சத்தில் மட்டுமே, இந்த 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை டெலிட் செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய கிடைக்காது என்கிற நிலைப்பாடு இருந்தது.

    ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.!

    அதாவது, ஒரு முறை டவுன்லோட் செய்யப்பட்ட பைலை, ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் இருந்து டெலிட் செய்து விட்டால், அதை மீண்டும் வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியாது. ஆனால், அதை சாத்தியமாகும் வண்ணம் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, வாட்ஸ்ஆப் சேமிப்பக நெறிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆக, இனி ஒரு பயனரால் டவுன்லோட் செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்டாலும் கூட, வாட்ஸ்ஆப்பின் சர்வரில் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், மல்டிமீடியா உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் சேவையகம் மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்) என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.

    எந்த வாட்ஸ்ஆப் வெர்ஷனில் கிடைக்கும்.?

    வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான்.

    சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.?

    இதற்கு முன்னதாக வெளியான 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை பொறுத்தவரை, முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.

    Instagram Simple Tips and Tricks (TAMIL)
    சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.?

    சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.?

    நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படியாகத்தான் சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை மேம்படுத்தல்.!

    வாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், செயலிக்குள் உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    WhatsApp now lets you open chat even without visiting app; here is how it works and other details. Read more about this in Tamil GizBot.
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more