வாட்ஸ் அப்-இல் அறிமுகமாகியுள்ள இரண்டு புதிய வசதிகள் பற்றி தெரியுமா?

வாட்ஸ் அப்-இல் பிக்சர் இன் பிக்சர் காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் ஆகிய இரண்டு புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

By Siva
|

சமூக வலைத்தளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் வாட்ஸ் அப் அவ்வப்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை செய்து தரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது

வாட்ஸ் அப்-இல் அறிமுகமாகியுள்ள இரண்டு புதிய வசதிகள் பற்றி தெரியுமா?

இதன்படி இனிமேல் பிக்சர் இன் பிக்சர் காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் ஆகிய இரண்டு புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டு வகைகளுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது

.முதலில் பிக்சர் இன் பிக்சர் என்றால் என்ன என்று பார்ப்போம். வாட்ஸ் அப்-ஐ நீங்கள் உபயோகப்படுத்தி கொண்டிருக்கும்போது ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பணிகளை செய்யலாம். அதாவது ஒருவரிடம் வீடியோ காலிங் பேசிக்கொண்டே இன்னொருவருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம்.

வீடியோ காலிங் அளவை குறைத்து கொண்டு கீழே தெரியும் டெக்ஸ்ட் இடத்தில் இன்னொரு நண்பருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம்

இந்த வசதி கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே பரிசோதனை முறையில் இருந்த நிலையில் தற்போது இந்த வசதி அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4 கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.11,999/- தானாம்.!4 கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.11,999/- தானாம்.!

இரண்டாவதாக வீடியோ மற்றும் புகைப்படங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதை போன்று இனிமேல் டெக்ஸ்ட் மெசேஜ்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி டெக்ஸ்ட்டில் பின்னணியில் கலரும் கொடுக்கலாம்.

ஆனால் அதே நேரத்தில் டெக்ஸ்ட் மெசேஜ்கள் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும். பின்னர் தானாகவே மறைந்துவிடும். இந்த புதிய வசதிகள் வாட்ஸ் அப்-இன் புதிய அப்டேட்டில் காணப்படும். ஆண்ட்ராய்டு போனுக்கு v2.17.323 மற்றும் ஐஒஎஸ் போனுக்கு 2.17.52. அப்டேட்டில் இந்த வசதிகள் கிடைக்கும்

வாட்ஸ் அப்-ஐ மென்மேலும் மெருகேற்ற கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறது. மேலும் பல புதிய மாற்றங்கள் வரும் காலங்களில் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp has rolled out two new features - support for picture-in-picture and ability to have text as a status message - on its Android and iPhone platform.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X