வாட்ஸ்அப் வீடீயோ காலில் எட்டு பேர் உரையாடலாம்.! எந்த பதிப்புகளில் கிடைக்கும்?

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் குறுந்தகவல் செயலியாக மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அட்டகாச அம்சங்களை வழங்கி வருகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம்

அதன்படி இந்த வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர்மட்டுமே கலந்து கொள்ள முடியும என்ற நிலை நிலவியது, தற்சமயம் இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் அதிபடுத்தி
உள்ளது.

வாட்ஸ் க்ரூப்

இப்போது உள்ள காலக்கட்டத்தில் க்ரூப் வீடியோ கால் சேவைக்கான தட்டுப்பாடு அதிகரித்து இருக்கு நிலையில் வாட்ஸ் க்ரூப் கால் அம்சத்தலி மாற்றம் செய்ய இருக்கிறது.

அட்டகாசமான ஆறு-கிரக அமைப்பை கண்டறிந்த வானியலாளர்கள்..!அட்டகாசமான ஆறு-கிரக அமைப்பை கண்டறிந்த வானியலாளர்கள்..!

 பீட்டா பதிப்பில் சோதனை

அதாவது வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் போது எட்டு பேரை பங்கேற்க செய்யும் அம்சம்பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட்டு விட்டது. விரைவில் இதற்கான ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.

பயனர்கள் க்ரூப் கால்

குறிப்பாக பயனர்கள் க்ரூப் கால் செய்ய வாட்ஸ்அப் க்ரூப் சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம். அழைப்பை மேற்கொண்டதும் வாட்ஸ்அப் க்ரூப் கால் அம்சத்தை இயக்கவிடும். இதுதவிர பயனர்கள் கால்ஸ் டேப் சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து க்ரூப் கால் செய்யலாம் என்பது குறிப்பிடத்தகக்து.

காலத்தில் நாம் அனைவரும்

மேலும் கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் Together at home' என்னும் புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

வாட்ஸ்அப் நிறுவனம்

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் சூழ்நிலையில்
Together at home என்னும் ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வீட்டில் இருக்கும் வேளையில் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கவும் இப்பேரிடர் காலத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வருவோம் என்ற உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

வீட்டில் இருந்தே பணி

குறிப்பாக இந்த ஸ்டிக்கர் பேக்கில் சமூக விலகலை ஊக்குவிக்கும் வண்ணம் ஹைஃபை, ஒகே,கை கழுவுதல், வீட்டில் இருத்தல்,வீட்டில் இருந்தே பணி புரிதல் போன்ற பல்வேறு அருமையான ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 உடன் சேட் பாக்ஸில்

மேலும் இந்த புதிய ஸ்டிக்கர் பேக் ஆனது வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது, அப்டேட் செய்த உடன் சேட் பாக்ஸில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷன் சென்று `Together at home' என்னும் இந்த பேக்கை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp now Allows 8 Members in Group and Voice Calls: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X