Home
Apps

வாட்ஸ்ஆப்பில் "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட" ஒரு புதிய அம்சம் உருட்டப்பட்டுள்ளது.!

அதென்ன அம்சம்.? அதன் நன்மைகள் என்ன.? மேலும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.?

By Muthuraj

ஆண்ட்ராய்டு வெர்ஷனின் புதிய பீட்டா பதிப்பு, சில முக்கிய புதுப்பிப்புகளுடன் வெளிவருகிறது. பயன்பாட்டின் அளவு (சைஸ்) குறைக்கப்பட்டிருக்கும் மறுபக்கம் இந்த புதிய ​​பீட்டா பதிப்பு தன் பயனர்களுக்கான "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட" ஒரு புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்பில்

வெகு காலமாக "சேன்ஜ் நம்பர்" அம்சம் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பின் ஒரு பகுதியாக இருந்து தற்போது முதல் முறையாக இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பிற்கு வந்துள்ளது. அதென்ன அம்சம்.? அதன் நன்மைகள் என்ன.? மேலும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.?

தோராயமாக 6எம்பி.!

தோராயமாக 6எம்பி.!

டெக்னொபோலிஸ் என்ற தொழில்நுட்ப வலைத்தளத்தின்படி, சமீபத்திய 2.17.375 பதிப்பானது பதிவிறக்கம் மற்றும் நிறுவும் போது குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது. தோராயமாக 6எம்பி எடுத்துக்கொள்கிறது என்றும் கடந்த பதிப்புகளில் இருந்த 20 லைப்ரரிஸ் இந்த பதிப்பில் நீக்கப்பட்டது தான் அதற்கு காரணம் என்றும் அறியப்படுகிறது.

அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும்.!

அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும்.!

மற்றொரு முக்கிய அப்டேட் ஆக, நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் எண்ணை மாற்றும் போது, ​உங்கள் வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கு குறிப்பிட்ட காண்டாக்ட் நம்பர் மேம்படுத்தல் சார்ந்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும். உங்கள் மொபைல் எண்ணை மாற்றும் ஒவ்வொரு முறையும் இந்த அம்சம் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

473 சிறிய அளவிலான பிழை.!

473 சிறிய அளவிலான பிழை.!

மேலும் இந்த "சேன்ஜ் நம்பர்" அம்சத்தை, எந்தவொரு தனிப்பட்ட தொடர்புகளுக்கும் மற்றும் க்ரூப்களுக்கும் கூட கஸ்டமைஸ் செய்யலாம். இந்த இரண்டு பிரதான புதுப்பித்தல்களுடன், ஆப்பில் உள்ள சுமார் 473 சிறிய அளவிலான பிழைகளையும் நீக்கம் செய்துள்ளது.

அனைத்து பதிப்புகளுக்கும் உருட்டப்படுமா.?

அனைத்து பதிப்புகளுக்கும் உருட்டப்படுமா.?

இந்த புதிய அம்சங்கள் இன்னும் பீட்டா பதிப்பின் பகுதியாகவே இருக்கிறது மற்றும் இந்த அம்சங்கள் உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் உருட்டப்படுமா என்பது சார்ந்த வார்த்தைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாண்ட், கலர் மற்றும் லின்க்.!

பாண்ட், கலர் மற்றும் லின்க்.!

வாட்ஸ்ஆப் சமீபத்தில் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தில் ஒரு புதிய மேம்படுத்தலை உருட்டியது. அது டெக்ஸ்ட் அடிப்படையிலான ஸ்டேட்டஸ் அமைக்க பயனர்களை அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி - பாண்ட், கலர் மற்றும் லின்க் இணைப்பு ஆகிய விடயங்களிலும் "கஸ்டமைஸ்" நிகழ்த்திக்கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp to notify your contacts when you change phone number. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X