ஐபோன் பயனர்களுக்கு தனிபாசம் காட்டிய வாட்ஸ்அப்.! புதிய ஷார்ட்கட் வசதி.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ஐபோன் பயனர்களுக்காக

இந்நிலையில் ஐபோன் பயனர்களுக்காக வாட்ஸ்அப் புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட்டுள்ளது, இந்த அப்டேட் ஆனது காண்டாக்ட்ஸ் ஷார்ட்கட் எனும் புதிய வசதி அணுக கிடைக்கிறது. இதனுடன் புதிய பீட்டா வெர்ஷன் ஐபோன்களுக்கான வாட்ஸ்அப்பில் காணப்பட்ட
பொதுவான பிழைகளுக்கான திருத்தங்களுடனும் மற்றும் வாய்ஸ் ஓவர் மேம்பாடுகளையும் கொண்டுவருகிறது.

வெளியிட்டுள்ள அறிக்கையின்

மேலும் WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், ஐபோனுக்கான புதிய வாட்ஸ்அப் v2.20.80.22 பீட்டா வெர்ஷனை பெறும் பயனர்கள் ஐஒஎஸ் ஷேர் ஷீட்டில் நிலையான பல ஷார்ட்கட்களைக் காண முடியும்.

ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்!ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்!

மேலும் இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஆனது

இதற்கு முந்தை 2.20.70 பீட்டா வெர்ஷனில், சில பயனர்கள் காண்டாக்ட்ஸ் ஷார்ட்கட்களைப் பயன்படுத்த முடிந்தது. இந்த பீட்டா அப்டேட்டில் வாட்ஸ்அப் சாட்டில் ஒரு செய்தியை அனுப்பிய பிறகு, பெரும்பாலான பயனர்களால் ஷேர் ஷர்ட்கட்களை காண முடிகிறது. மேலும் இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஆனது iOS 13.6 beta version-கீழ் வேலை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்திசைக்கப்பட்டது. மேலும் ஒரு காண்டாக்ட் தனது சுயவிவரப்

பீட்டா பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஷார்ட்கட் வசதியானது ஒரு ஐகானையும் கொண்டுள்ளது, இது வாட்ஸ்அப் உடன் ஒத்திசைக்கப்பட்டது. மேலும் ஒரு காண்டாக்ட் தனது சுயவிவரப் படத்தை மாற்றினால் கூட, ஷேர் ஷீட்டில், பயனர் எப்போதும் மிகவும் புதுப்பிக்கப்பட்ட ஒன்றையே காண்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.70.19 பீட்டா

இந்த வசதி கடந்த மாதம் ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.70.19 பீட்டாவில் முதன்முதலில் காணப்பட்டது. ஆனால் அப்போது இந்த வசதியை ஒரு சில பயனர்கள் மட்டுமே பெற்றனர். இந்த புதிய காண்டாக்ட்ஸ் ஷார்ட்கட் வதி வாட்ஸ்அப் வாய்ஸ் ஓவருக்கான ஆதரவையும் மேம்படுத்தியுள்ளது, குறிப்பாக நீங்கள் archive மற்றும் unarchive செய்யும் போது.

சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்! எங்கு தெரியுமா?சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்! எங்கு தெரியுமா?

கியூஆர் குறியீடுகள்,

இதற்குமுன்புவாட்ஸ்அப் நிறுவனம் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்கள்,கியூஆர் குறியீடுகள், டெஸ்க்டாப் & வெப்பிற்கான டார்க் மோட்
பயன்முறை மற்றும் க்ருப் வீடியோ காலிங் வசதியில் சில மேம்பாடுகள் போன்றஅப்டேட்களை பீட்டாவிலிருந்து அதன் நிலையான பதிப்பிற்கு கொண்டு வருகிறதுஎனத் தெரிவித்தது.

அடுத்த சில வாரங்களில்

புதிய அம்சங்கள் அடுத்த சில வாரங்களில் ஸ்டாண்டர்ட் வெர்ஷன்களுக்கு வெளியிடப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம்
உறுதிப்படுத்தியுள்ளது. கண்டிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி முதலில் பயனர்கள் வாட்ஸ்அப்-ன் சமீபத்திய பதிப்புகளில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை பார்க்கத் தொடங்குவார்கள், பின்புஇதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆனது நகரும் அல்லது ஜிஃப் வீடியோவாக இருக்கும்.

ண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வெளிவந்த அறிவிப்பில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சாட் செய்ய எளிய, பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட வழியை வழங்குவதில் எங்கள் கவனம் அதிகமாக உள்ளது. பின்பு வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள ஒரு வழியாக உறுதிபடுத்த எங்கள் தயாரிப்பு வடிவமைப்பை நாங்கள் தொடரந்து முன்னெடுத்து வருகிறோம் எனவும், சில வாரங்களில் வெளிவரும் சில புதிய அம்சங்களை உறுதிப்படுத்த நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். விரைவில் வரும்
வாட்ஸ்அப் அப்டேட் ஆனது QR குறியீடுகளையும் பெறும், இந்த வசதி புதிய தொடர்புகளை எளிதாக சேர்க்க உதவும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மற்ற நபரின் குறியீட்டை ஸ்கேன் செய்வது மட்டுமே, பின்னர் அவர்களின் தொடர்பு தானாகவே வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் டார்க் மோட் வசதி பற்றி

அதேபோல வாட்ஸ்அப் டார்க் மோட் வசதி பற்றி அனைவருக்கும் தெரியும், மிகவும் பிரபலமான இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயன்பாட்டிற்கு ஏற்கனவே கிடைத்திருந்தாலும் அடுத்த சில வாரங்களில் இதே அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பதிப்பிலும் வெளியிடப்படும் எனப்த குறிப்பிடத்தக்கது. அடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் க்ருப் காலிங் வசதியில் சில
மேம்பாடுகளை செய்துள்ளது,அதாவது இப்போது ஒரு வீடியோ அழைப்பில் 8பேர் வரை இடம்பெறலாம் என்பதால்,குறிப்பிட்ட நபரை மட்டுமே அழுத்தி அவரின் வீடியோவை முழுத் திரையில் வைத்திருக்க அனுமதிக்கும் அம்சம் உட்பட சில அட்டகாசமான அப்டேட்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp for iPhone Latest Beta Brings Contacts Shortcut, Voice Over Improvements: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X