Home
Apps

இப்போ வாங்கடா போட்டிக்கு.. AI-ஐ இறக்கிய மார்க்.. WhatsApp-ல் 2 முக்கிய மாற்றங்கள், 2 புதிய அம்சங்கள்!

வாட்ஸ்அப்பிற்கு (WhatsApp) கிடைத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் ஆனது, வாட்ஸ்அப் சாட்களுக்குள் ஏஐ டூல்களை (AI Tools) நேரடியாக கொண்டு வரும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், பயனர்கள் பல ஆண்டுகளாக சந்தித்து வந்த சில முக்கிய சிக்கல்களையும் சரி செய்துள்ளது.

இந்த அப்டேட்டின் வழியாக - போட்டோ எடிட்டிங் மற்றும் ரைட்டிங் சஜ்ஜஷன்ஸ், எளிதான சாட் டிரான்ஸ்பர், ஐபோன்களில் மல்டி அக்கவுண்ட் ஆதரவு மற்றும் மேம்பட்ட ஸ்டோரேஜ் கட்டுப்பாடுகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அம்சங்களுக்கான ரோல்அக்வுட் ஆனது ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும், வரும் வாரங்களில் இது பல பயனர்களை வந்தடையும் என்றும் மெட்டா (Meta) தெரிவித்துள்ளது.

WhatsApp-ல் 2 முக்கிய மாற்றங்கள், 2 புதிய அம்சங்கள்!

இந்த அப்டேட்டின் முக்கிய மாற்றம் - சாதாரண சாட்களில் ஏஐ எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதே ஆகும். இப்போது நீங்கள் ஒரு போட்டோவை ஷேர் செய்யும் போது, ​​அதை அனுப்புவதற்கு முன்பு எடிட் செய்யலாம். அதாவது பேக்கிரவுண்ட்டில் உள்ள தேவை இல்லத்தை ஒன்றை நீக்கலாம், காட்சியை மாற்றலா அல்லது ஒரு விரைவான எபெக்ட்டை கூட பயன்படுத்தலாம்; இதெல்லாமே வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமலேயே செய்யலாம்.

இந்த அப்டேட் - மெசேஜ் ரைட்டிங்களிலும் மாற்றத்தை கொண்டுவருகிறது. இனி எல்லாவற்றையும் புதிதாக டைப் செய்வதற்குப் பதிலாக, பயனர்கள் உரையாடலின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட பதில்களை (Suggested replies) பெறலாம். அவற்றை அப்படியே அனுப்பலாம் அல்லது மாற்றியமைக்கலாம். இது, குறிப்பாக வழக்கமான உரையாடல்களில், விரைவான பதில்களை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நடக்கும் சாட்களும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டதாக இருக்குமென்று மெட்டா கூறுகிறது.

டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற ஆப்கள் ஏற்கனவே இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்களை சோதித்து வருகின்றன, ஆனால் வாட்ஸ்அப்பின் அணுகுமுறை, பயனர்களை தனித்தனி டூல்களுக்குள் தள்ளுவதற்கு பதிலாக, எல்லாவற்றையும் ஒரே உரையாடல் ஓட்டத்திற்குள்ளேயே வைத்திருக்கிறது.

இந்த அப்டேட்டின் வழியாக வாட்ஸ்அப் நிறுவனமானது - மெசேஜ்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட - சிக்கலான வழிமுறைகளை பின்பற்றாமல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டுக்கு இடையில் சாட் ஹிஸ்டரியை டிரான்ஸ்பர் செய்வதை எளிதாக்கி உள்ளது

மேலும் ஐபோன் பயனர்கள் ஒரே டிவைஸில் பல அக்கவுண்ட்களை நிர்வகிப்பதற்கான ஆதரவையும் பெறுகிறார்கள். ஆப்பிற்குள்ளேயே நீங்கள் அக்கவுண்ட்களுக்கு இடையில் மாறலாம், மேலும் எந்த அக்கவுண்ட் ஆக்டிவ் ஆக உள்ளது என்பதை காட்டும் ஒரு ப்ரொபைல் இண்டிகேட்டர் உடன், வேலை மற்றும் தனிப்பட்ட சாட்களை நிர்வகிப்பதை இது எளிதாக்குகிறது.

வாட்ஸ்அப் ஸ்டோரேஜிலும் இப்போது அதிக கட்டுப்பாடு கிடைக்கிறது. நீங்கள் ஒரு சாட்டிற்குள் சென்று, பெரிய பைல்களை கண்டறிந்து அவற்றை தனித்தனியாக நீக்கலாம், அல்லது சாட்டை அப்படியே வைத்துக்கொண்டு மீடியாவை மட்டும் டெலிட் செய்யலாம். இது ஒரு சிறிய மாற்றம்தான், ஆனால் சாட் களை க்ளீன் ஆக வைக்க இருக்கும் இடையூறுகளை குறைக்கிறது. கடைசியாக நீங்கள் ஈமோஜிகளை டைப் செய்யும்போது, ​​வாட்ஸ்அப் ஆனது ஸ்டிக்கர்களையும் பரிந்துரைக்கும், இது கைமுறையாக தேடாமல் விரைவாக பதிலளிக்க உங்களுக்கு ஒரு வழியை வழங்குகிறது.

OPINION - வாட்ஸ்அப்பிற்கு வந்த்துள்ள இந்த மேம்படுத்தல்கள், மெட்டா நிறுவனம் தனது ஆப்கள் முழுவதும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை (Artificial Intelligence) கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக அமைகிறது. இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் பேஸ்புக்கில் (Facebook) ஏற்கனவே காணப்படும் டூல்களுடன் வாட்ஸ்அப்பும் இணைகிறது.

அதே நேரத்தில், எளிதான சாட் டிரான்ஸ்பர் மற்றும் மல்டி அக்கவுண்ட் ஆதரவு போன்ற அம்சங்கள் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றன. டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற போட்டியாளர்கள் இதே போன்ற திறன்களை தொடர்ந்து சேர்த்து வரும் நிலையில், வாட்ஸ்அப் அதன் பயனர் தளத்தை தக்கவைத்து கொள்ள இது நிச்சயம் உதவும்.

முன்னரே குறிப்பிட்டபடி பயனர்களுக்கு, இந்த மாற்றங்கள் வழக்கமான ஆப் அப்டேட்கள் மூலம் கிடைக்கும். எனவே, அவை வெளியிடப்படும்போது அவற்றை (புதிய அம்சங்கள் / மாற்றங்கள்) அணுகுவதற்கு, வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யப்பட்ட வைத்திருந்தாலே போதும். கிடைக்கும் தன்மை ஆனது பிராந்தியத்தை பொறுத்து மாறுபடலாம், மேலும் பெரும்பாலான படிப்படியான வெளியீடுகளை போலவே, இந்த அம்சங்களும் மெதுவாகவே வந்து சேரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp New Update AI photo editing writing tools Easy Chat Transfer Multi Account Storage Controls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X