வாட்ஸ்அப் கொண்டுவரும் ரீட் லேட்டர் அம்சம்: இதனால் என்ன பயன்?

|

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப்பை நிராகரித்து, சிக்னல் மற்றும் டெலிக்ராம் போன்ற வேறு மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களுக்கு மாறிவருகின்றனர். இதனால், இப்போது வாட்ஸ்அப் ஒரு பெரிய U-டர்ன் எடுத்துள்ளது. இதையெல்லாம் நாங்கள் செய்யமாட்டோம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

 8-ம் தேதி முதல் மாற்றி

வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக முன்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால், ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக புதிய விதி ஒப்புதலுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க மார்ச் 15ம் தேதி இறுதி நாளாக இப்போது மாற்றப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் பயனர்களின் சாட் மற்றும் கால் அம்சங்கள் எப்போதும் போல் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு

இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அசத்தலான அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வெளிவந்த WABetaInfo-வின் தகவலின்படி வாட்ஸ்அப் நிறுவனம் ரீட் லேட்டர் (Read Later) என்கிற புதிய அம்சத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் ஸ்டேபிள் பயனர்களுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் அசத்தலான 42-இன்ச் ஸ்மார்ட் டிவி.! 43-இன்ச் டிவியின் விலை இவ்வளவு தான்.!ரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் அசத்தலான 42-இன்ச் ஸ்மார்ட் டிவி.! 43-இன்ச் டிவியின் விலை இவ்வளவு தான்.!

ட்ஸ்அப்பின்

அதாவது ஆர்ச்சிவ்டு சாட்ஸ் (archived chats) அம்சத்தின் சிறந்த பதிப்பாக இந்த அம்சம் செயல்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் சமீபத்திய 2.21.2.2 பீட்டா வெர்ஷனில இயக்கப்பட்டுள்ளதாக WABetaInfo தகவல் தெரிவித்துள்ளது.

 பிரிவிற்கு வந்துவிடும்

பயனர்கள் ஏற்கனவே இருக்கும் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் உடன் இந்த புதிய அம்சத்தை குழப்பிக்கொள்ள வேண்டாம். அதாவது இப்போதைக்கு பயனர்கள் தனிப்பட்ட அல்லது க்ரூப் சாட்டை ஆர்ச்சிவ் செய்தால், குறிப்பிட்ட சாட் ஆனது ஆர்ச்சிவ்டு சாட்ஸ் பிரிவின் கீழ் மறைக்கப்படும். அவை சாட்ஸ் பிரிவில் காணப்பாடது. ஆனால் அதே சாட்டில் புதிய மெசேஜ் வரும்போது அது ஆர்ச்சிவ்டு சாட்ஸ் பிரிவில் இருந்து

சாட்ஸ் பிரிவிற்கு வந்துவிடும்.

ரீட் லேட்டர் அம்சமானது

ஆனால் வரவிருக்கும் ரீட் லேட்டர் அம்சமானது இந்த தடங்கல்களிலிருந்து விடுபட உங்களுக்கு வழிவகுக்கும். அதாவது இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப்பில் ரீட் லேட்டர் என்கிற புதிய செக்ஷன் உருவாகும். இதில் நீங்கள் விரும்பும் சாட்களை ஆட் செய்யலாம். அப்படியாக ஆட் செய்யப்படும் சாட்களில் புதிய மெசேஜ்கள் வந்தாலும் கூட அது ரீட் லேட்டர் செக்ஷனை விட்டு வெளியே வராது என்பது குறிப்பிடத்தக்கது.

செட்டிங்ஸ் வழியாக

மேலும் வெளிவந்த தகவலின்படி, நீங்கள் ரீட் லேட்டர் அம்சத்தினை விரும்பவில்லை என்றால், குறிப்பிட்ட சாட்-ஐ பழைய செயல்பாட்டுக்கே "தரமிறக்க" விரும்பினால், வாட்ஸ்அப் சாட் செட்டிங்ஸ் வழியாக அதை சாத்தியப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Read read Letter Feature: What are the benefits: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X