வாட்ஸ்ஆப் மெசேஜ் தானாகவே அழியும்: சத்தமில்லாமல் புத்தம் புதிய அப்டேட்.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

தானகவே அழியும் வசதி

தானகவே அழியும் வசதி

இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்திக்குப் பின்பு மெசேஜ் தானகவே அழியும் வசதியை அறிமுகம் செய்ய வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, இது பற்றிய முழுமையான தகவலைப் பார்ப்போம்.

சோதனை செய்து வருவதாக தகவல்

சோதனை செய்து வருவதாக தகவல்

ஏற்கனவே ப்ரொபைல் QR குறியீடுகள், அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள், பிங்கர் பிரிண்ட் அன்லாக், போன்ற பல்வேறு அம்சங்கள் முதலில் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்புகளில காணப்பட்டன. அந்த வரிசையில் மெசேஜ் தானகவே அழியும் வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ் ஆப்பில் ஊடுறுவும் ஹேக்கர்கள்: GIF-ல் வந்த ஆபத்து உஷரா இருங்க.!வாட்ஸ் ஆப்பில் ஊடுறுவும் ஹேக்கர்கள்: GIF-ல் வந்த ஆபத்து உஷரா இருங்க.!

பாப்-அப் விண்டோ காட்சிப்படுகிறது

பாப்-அப் விண்டோ காட்சிப்படுகிறது

இந்த புதிய அம்சம் எப்படி செயல்படும் என்றால், வாட்ஸ்ஆப்-ல் இந்த அம்சம் வந்தவுடன், முதலில் ஒரு பாப்-அப்விண்டோ காட்சிப்படுகிறது. இது குறிப்பிட்ட மெசேஜின் காலாவதி நேரத்தை நீங்களே தேர்வு செய்யும் அணுகலைவழங்குகிறது, அதில் 5வினாடிகள் அல்லது 1மணி நேரத்திற்கு இடையில் தேர்வுசெய்யும் விருப்பங்கள் காணப்படுகிறது.

குரூப் மெசேஜில் மட்டுமே

குரூப் மெசேஜில் மட்டுமே

பின்பு இந்த அம்சம் இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் க்ரூப்பில் அனுப்பப்படும் எந்தவொரு மெசேஜும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே அழியும். இந்த அம்சம் முதலில் குரூப் மெசேஜில் மட்டுமே செயல்படும் எனவும் வருங்காலத்தில் பிரைவேட் மெசேஜ்-க்கும் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களின் தகவலைத் திருடும் அப்ஸ்கள்! உஷார் மக்களே!ஆண்ட்ராய்டு பயனர்களின் தகவலைத் திருடும் அப்ஸ்கள்! உஷார் மக்களே!

அழியும் வசதியை தேர்வு செய்ய வேண்டும்

அழியும் வசதியை தேர்வு செய்ய வேண்டும்

குறிப்பாக குரூப்-ல் ஒரு முக்கியமான செய்தியை அனுப்பும்போது, அது நீண்ட நாட்கள் மற்றவர்களிடம் இருக்க வேண்டாம் என நினைக்கும் பயனர்களுக்கு கண்டிப்பாக இது உதவும். பின்பு செய்தியை நாம் அனுப்பும்போது கவனமாக ஜந்து வினாடிகள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு பிறகு தானகவே அழியும் வசதியை தேர்வு செய்ய வேண்டும், அப்போது தான் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வரும்

விரைவில் வரும்

தற்சமயம் வரை இந்த புத்தம் புதிய அம்சம் அதன் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் உள்ளது, இதுவரை பயனர்களுக்குஅணுக கிடைக்கவில்லை, பின்பு இதன் வெளியீட்டு தேதியும் அறிவிக்கவில்லை. இருந்தபோதிலும் இந்த அம்சம்விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy:WABetaInfo

Best Mobiles in India

English summary
WhatsApp New Feature 'Disappearing Messages' Rolled Out: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X