Home
Apps

புது தடை.. இனி 2 ஆப்ஷன்ஸ் தான்.. தெரியாத நம்பரில் இருந்து வரும் WhatsApp மெசேஜ்கள் காலி!

அடையாளம் தெரியாத மொபைல் எண்களில் இருந்து வரும் ஸ்பேம் மெசேஜ்களை அடையாளம் காண உதவும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 'ஸ்கேம் அலர்ட்' (Scam Alert) என்று அழைக்கப்படும் இந்த அம்சம், உங்களுடைய உரையாடல்களை தனிப்பட்டதாக வைத்திருக்கும் அதே வேளையில், ஒரு மெசேஜ் சந்தேகத்திற்குரியதாக தோன்றும் போது பயனர்களை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த அமைப்பு பயனரின் டிவைஸிலேயே முழுமையாக செயல்படும். அதாவது, சாத்தியமான மோசடிகளை கண்டறிய வாட்ஸ்அப் மெசேஜ்களை படிக்கவோ அல்லது அவற்றை எக்ஸ்டர்னல் சர்வர்களுக்கு அனுப்பவோ செய்யாது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது மற்றும் பரவலான வெளியீடு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது தடை.. தெரியாத நம்பரில் இருந்து வரும் WhatsApp மெசேஜ்கள் காலி!

வாட்ஸ்அப் 'ஸ்கேம் அலர்ட்' அம்சம் என்றால் என்ன? 'ஸ்கேம் அலர்ட்' என்பது பயனர்கள் மோசடியான மெசேஜ்களை கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய பாதுகாப்பு அம்சமாகும். இந்த அம்சத்தை ஆன் செய்யும் போது, ​​அடையாளம் தெரியாத மொபைல் நம்பர்களில் இருந்து வரும் மெசேஜ்களை வாட்ஸ்அப் பகுப்பாய்வு செய்யும். அதில் ஏதேனும் ஒரு மெசேஜ் சந்தேகத்திற்குரியதாக தோன்றினால், உங்களை எச்சரிக்கை செய்யும்.

இந்த எச்சரிக்கை நேரடியாக உரையாடலுக்குள்ளேயே காட்டப்படும், இது பயனர்கள் அனுப்புநருடன் உரையாடுவதற்கு முன்பு கூடுதல் தகவல்களை வழங்கும். இந்த அம்சம் உரையாடல்களை தானாகவே பிளாக் செய்வதற்கு பதிலாக, அதை பயனர்களே முடிவு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ-வின்படி, இந்த அம்சத்தின் சிறப்பு - ப்ரைவஸி மீதான கவனம் ஆகும்.

ஸ்கேம் அலெர்ட் அம்சமானது, மெசேஜ்களை பயனரின் டிவைஸிலேயே முழுமையாக செயலாக்கும். அதாவது, மெசேஜின் கன்டென்ட் பகுப்பாய்விற்காக வாட்ஸ்அப்பின் சர்வர்களுக்கு அனுப்பப்படாது. இதன் விளைவாக, உரையாடல்கள் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் மூலம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். மேலும், சாத்தியமான மோசடிகளை சரிபார்க்கும்போது, ​​வாட்ஸ்அப்பால் பயனர்களின் மெசேஜ்களை படிக்க முடியாது. அதாவது இந்த இந்த அம்சம் பின்னணியில் அமைதியாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கேம் அலெர்ட் அம்சம் கொடுக்கும் 2 ஆப்ஷன்கள்: தெரியாத ஒரு மொபைல் நம்பரில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய மெசேஜை வாட்ஸ்அப் கண்டறிந்தால், அந்த மெசேஜ் ஒரு மோசடியாக இருக்கலாம் என்று ஒரு எச்சரிக்கையை காண்பிக்கும். அதன்பிறகு பயனர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படும்: 1. அந்த காண்டாக்ட்-ஐ பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்வது (Block and report). 2. அந்த உரையாடலை நம்பி, உரையாடலை தொடருதல்.

அதாவது முன்னரே குறிப்பிட்டபடி, வாட்ஸ்அப் ஆனது சந்தேகத்தின் அடிப்படையில் தானாகவே ஒரு மெசேஜை பிளாக் செய்யாது அல்லது பயனர்கள் அதற்கு பதிலளிப்பதை தடுக்காது. மாறாக, தெரியாத அனுப்புநர்களுடன் உரையாடும்போது பயனர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுவதே இந்த அம்சத்தின் பிரதான நோக்கம் ஆகும்

இதேபோல வாட்ஸ்அப் நிறுவனம், தனது மொபைல் ஆப்பில் ஒரு பிரத்யேக லாக்-அவுட் வசதியை (Log-out Feature) உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்துள்ள சாமீபத்திய அறிக்கையின்படி, பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்ம் ஆன வாட்ஸ்அப் ஒரு புதிய வசதியை சோதித்து வருகிறது.

அது வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யாமலோ அல்லது தங்களின் சாட்களை இழக்காமலோ, பயனர்கள் தங்கள் அக்கவுண்ட்களிலிருந்து வெளியேற அனுமதிக்கிறது. இது வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இழக்காமல், அதே சமயம் வாட்ஸ்அப்பில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க விரும்புவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பிளாக் செய்வது, பிளாக் செய்யப்படுவது போன்ற விஷயங்களால் துவண்டு போனவர்களுக்கு பெரிய நிம்மதி அளிக்கும் அம்சமாக இருக்கும் .

இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்ர்களுக்கு கிடைக்கிறது, மேலும் இது காலப்போக்கில் பரவலாக வெளியிடப்படலாம். பிரத்யேக சைன்-அவுட் வசதியை வழங்கும் பெரும்பாலான மெசேஜிங் மற்றும் சமூக ஊடக தளங்களை போலல்லாமல், வாட்ஸ்அப்பில் பாரம்பரியமாக லாக்-அவுட் வசதி இருந்ததில்லை. இதுவரை, ஒரு டிவைஸில் இந்த சேவையிலிருந்து துண்டிக்க விரும்பும் பயனர்கள் ஆப்பை நீக்க வேண்டியிருந்தது, இதனால் அவர்கள் பின்னர் எல்லாவற்றையும் மீண்டும் ரீசெட் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த புதிய அம்சம் ஒரு எளிமையான மற்றும் நெகிழ்வான மாற்றீட்டை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp Working on New Feature called Scam Alert Helps Users From Unknown Number Potential scam messages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X