90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றும் WhatsApp! என்ன தைரியம் இருந்த இப்படி ஒரு விஷயத்தை செய்யும்?

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் கிடைக்கும் ஒவ்வொரு வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப் அப்டேட்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் பயனர்கள் தங்கள் வாட்ஸ் செயலியில் புதிதாக வெளியாகவுள்ள அப்டேட் மூலம் தங்களுக்கு தாங்களே மெசேஜ் அனுப்பவும், முக்கியத் தகவல்களைச் சேமிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ME என்று இருக்கும்

ME என்று இருக்கும்

அதாவது இந்த வசதியில் வாட்ஸ்அப் உள்ளே பயனர்களின் பெயருக்குப் பதிலாக இனி ME என்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உங்களுக்குத் தேவையான அனைத்து முக்கியத் தகவல்களையும் சேமிக்கமுடியும். எனவே இந்த புதிய வசதியின் மூலம் முக்கியமான தகவல்களைச் சேமிக்க வேறு ஒரு ஆப் வசதியைத் தேட வேண்டியது இல்லை.

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

 90ஸ் கிட்ஸ்

90ஸ் கிட்ஸ்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இது 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றும் செயலாகும். அதாவது இப்போது பலர் தங்களது காதலை எளிமையாக வெளிப்படுத்திவிடுகின்றனர். ஆனால் 90ஸ் கிட்ஸ் அப்படி கிடையாது. காதலைச் சொல்ல மிகவும் கூச்சப்படுவர். இன்னும் சில 90ஸ் கிட்ஸ் தங்களது காதலை வெளியே சொல்லாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வர். வாட்ஸ்அப் நிறுவனமும் இப்போது அப்படியொரு அம்சத்தைத் தான் கொண்டுவரப் போகிறது.

Draft மெசேஜ்

Draft மெசேஜ்

வாட்ஸ்அப் கொண்டுவரும் புதிய அம்சம் ஒரு Draft மெசேஜ் நாம் சேமிப்பதுபோல ஆகும். குறிப்பாக இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் டெலிகிராம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவு சவால் தரமுடியும். அதேபோல் டெலிகிராம் செயலியில் கூட அவ்வப்போது புதிய அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Call Link வசதி

Call Link வசதி

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் Call Link வசதியை அறிமுகம் செய்தது. இந்த புதிய அம்சமானது பயனர்களை புதிய அழைப்பிற்கு அழைக்கவோ அல்லது முன்னதாகவே உள்ள அழைப்பில் சேரவோ அனுமதிக்கும்.

சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?

காலண்டர் ஐகான்

காலண்டர் ஐகான்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிப்பதற்கு வசதியாகத் தேதி குறிப்பிட்டுத் தேடும் வகையில் 'காலண்டர் ஐகான்' அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கும்.

WABetaInfo கூறுகையில்..

WABetaInfo கூறுகையில்..

குறிப்பாக காலண்டர் ஐகான் அம்சம் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களுக்கு முதலில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து WABetaInfo கூறுகையில், விரைவில் ஐஒஎஸ் பயனர்களுக்கு காலண்டர் ஐகான் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும், பின்பு முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா iOS 22.0.19.73

வாட்ஸ்அப் பீட்டா iOS 22.0.19.73

குறிப்பாக வாட்ஸ்அப் பீட்டா iOS 22.0.19.73 மூலம் இந்த வசதியை பயன்படுத்தக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் உங்களது நண்பர்களுக்கு முன்பு அனுப்பிய மெசேஜை பார்க்க விரும்பினால், முதலில் அவர்களது சாட் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அடுத்து அங்கு இருக்கும் காலண்டர் ஐகான் கிளிக் செய்தவுடன், காலண்டர் காண்பிக்கப்படும். அதன்பின்பு நீங்கள் எந்த தேதியில் பேசிய மெசேஜ் வேண்டுமோ, அந்த தேதியை சரியாக குறிப்பிட்டு செலக்ட் செய்யலாம்.

அதேபோல் இந்த காலண்டர் வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், அதே சாட் பக்கத்தில் scroll செய்தால் போதும் காலண்டர்மறைந்துவிடும்.

Best Mobiles in India

English summary
WhatsApp New Feature Called Message Yourself May hurt 90s Kids feeling : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X