வாட்ஸ்ஆப்-ல் களமிறங்கும் யாரும் எதிர்பார்க்காத அம்சம்.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

வாட்ஸ்ஆப் நிறுவனம்

வாட்ஸ்ஆப் நிறுவனம்

இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தினை சோதிக்க துவங்கியுள்ளது, இந்த அம்சம் என்வென்றால் வாட்ஸ்ஆப் வழியாக உங்களுக்கு கிடைக்கும் பார்வேட் மெசேகஜ்களின் (forward message) உண்மைத்தன்மையை சரிபார்க்க உதவும் எனக் கூறப்படுகிறது.

 பூதக்கண்ணாடி

பூதக்கண்ணாடி

அதாவது இந்த புதிய வசதி என்வென்றால், வாட்ஸ்ஆப் வழியாக பலமுறை அனுப்பப்பட்ட ஒரு குறிப்பிட்ட பார்வேட்மெசேஜிற்கு அருகில் பூதக்கண்ணாடி வடிவிலான ஒரு பட்டனை காட்சிப்படுத்தும், அதன் வழியாக குறிப்பிட்ட பார்வேட் செய்யலாமா என்ற முடிவை நீங்கள் எடுக்கலாம்.

வாட்ஸ்ஆப்-ன் பீட்டா

வாட்ஸ்ஆப்-ன் பீட்டா

வாட்ஸ்ஆப்-ன் இந்த புதிய வசதி வாட்ஸ்ஆப்-ன் பீட்டா சேனலின் வழியாக இந்த அம்சத்தை மெதுவாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்ஆப்-ல் வரும் இந்த பூதக்கண்ணாடி பட்டனை தட்டியதும், வாட்ஸ்ஆப் ஒரு பாப்-அப்பை காண்பிக்கும், அது இதை வெப் வழியாக தேட விரும்புகிறீர்களா?" என்று கேட்கும். பின்பு அங்கு நீங்கள் "Cancel" செய்யலாம் அல்லது "Search Web" பட்டனை கிளிக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 அம்சம் வரும்

குறிப்பாக தவறான அல்லது போலியான தகவல்களை எதிர்க்கும் வண்ணம் இந்த அம்சம் வரும், குறிப்பாக இந்திய பயனர்களுக்கு இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சம் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்பது தான் சிறப்பு.

மிகவும் நல்லது

கொரோனா வைரஸ் பரவி உள்ள இடங்கள், அதை குணப்படுத்துவது எப்படி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான போலி செய்திகள் அதிகமாக பரவி நேரத்தில் இதை ரோல் அவும் செய்வது மிகவும் நல்லது ஆகும். மேலும் வாட்ஸ்ஆப்-ல் இருக்கும் ஒரு சிறப்பான அம்சத்தைப் பார்ப்போம்.

டெலீட் மெசேஜ்ஜஸ் அம்சம்

டெலீட் மெசேஜ்ஜஸ் அம்சம்

டெலீட் மெசேஜ்ஜஸ் அம்சம் வாட்ஸ்அப் பயன்பாட்டில் பல சேவைகள் உள்ளது ஆனால், நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் டெலீட் மெசேஜ்ஜஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. இப்படி டெலீட் செய்த மெசேஜ்களை மீண்டும் காண்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

 வீடியோக்கள் அல்லது மெசேஜ்களை

டெலீட் மெசேஜ்ஜஸ் அம்சம் பயனர்களுக்கு தங்களின் சொந்த மெசேஜ்களை வாட்ஸ்அப்பில் இருந்து டெலீட் செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது மெசேஜ்களை வாட்ஸ்அப்பில் இருந்து முற்றிலுமாக நீக்க முடியும். அதாவது, இந்த மெசேஜ்களை நீக்கிய பின் நீங்கள் உட்பட யாரும் பார்க்க முடியாது. இருப்பினும், வாட்ஸ்அப் பயன்பாட்டில் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் காண ஒரு வழி உள்ளது.

அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படாத அம்சங்கள் உங்களுக்கு தேவையா?

அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படாத அம்சங்கள் உங்களுக்கு தேவையா?

டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் படிக்க இந்த வழி பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படாத வாட்ஸ்அப் அம்சங்களை அணுகுவதற்கு எப்போதும் ஒரு விலையை நாம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 தகவல்கள் பாதுகாப்பு இல்லாமல் போகலாம்

தகவல்கள் பாதுகாப்பு இல்லாமல் போகலாம்

இந்த விஷயத்தில், நாங்கள் பரிந்துரைக்கும் முறை OTP-கள் மற்றும் வங்கி இருப்பு விவரங்கள் உள்ளிட்ட உங்கள் நோட்டிபிகேஷன் அனைத்தையும் மூன்றாம் தரப்பு பயன்பாட்டிற்கு அம்பலப்படுத்தலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் உங்கள் டேட்டாகள் அனைத்தும் தனிப்பட்டதாக இருக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.

யன்படுத்திக்கொள்ளுங்கள்

சொந்த விருப்பத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
ஆகையால், தயவுசெய்து இந்த முறையை உங்கள் சொந்த ஆபத்தில் பயன்படுத்தவும், மற்றவர்கள் டெலீட் செய்த வாட்ஸ்அப் மெசேஜ்களை பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் உங்களுடைய விருப்பத்திற்கு உடையது. கட்டாயம் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை படிக்க வேண்டும் என்றால் பின்வரும் செயல்முறையைப் பின்பற்றுங்கள்.

டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படிப் மீண்டும் பார்ப்பது?

டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படிப் மீண்டும் பார்ப்பது?

Google Play ஸ்டோரில் இருந்து WhatsRemoved+ பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
WhatsRemoved+ பதிவிறக்கம் செய்யப்பட்டதும், பயன்பாட்டைத் திறந்து, பயன்பாடு கேட்கும் அனைத்து அனுமதிகளுக்கும் அணுகலை வழங்குங்கள். அனுமதிகளை வழங்கிய பிறகு, பயன்பாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள், இப்போது நீங்கள் அறிவிப்புகளைச் சேமிக்க விரும்பும் ஆப்ஸ்களைத் தேர்ந்தெடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்யுங்கள். அடுத்ததாக Yes> Save Files>Allow கிளிக் செய்து பயன்பாட்டிற்குத் தயாராகுங்கள்.

 டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்கள் WhatsRemoved+ பயன்பாட்டில் கிடைக்கும்

டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்கள் WhatsRemoved+ பயன்பாட்டில் கிடைக்கும்

இதற்குப்பின், வாட்ஸ்அப் பயன்பாட்டில் உங்களுக்கு வரும் அனைத்து நோட்டிபிகேஷன், மெசேஜ்கள் மற்றும் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்கள் உட்பட அனைத்தும் WhatsRemoved + பயன்பாட்டில் சேவ் செய்யப்படும். இந்த சேவ் செய்யப்பட்ட மெசேஜ்களை படிக்க இந்த பயன்பாட்டைத் திறந்து வாட்ஸ்அப் போல்டர் கிளிக் செய்து படித்துக்கொள்ளலாம் .

 iOS பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்காது

iOS பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்காது

iOS பயனர்களுக்கு இதுபோன்ற பயன்பாடு எதுவும் ஆப் ஸ்டோரில் கிடைக்கவில்லை , இது உங்கள் தனியுரிமைக்கு நல்லது, ஆனால் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளைப் பார்க்க வேண்டும் என்றால் நல்லது அல்ல. நாங்கள் Google Play ஸ்டோரில் நிறையப் பயன்பாடுகளைக் கண்டோம், ஆனால் அவற்றில் எதுவுமே WhatsRemoved + பயன்பாட்டைப் போலச் சிறப்பாகச் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp New Feature allows users to Verify Forward Messages: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X