Home
Apps

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய பிரவுக்கு புதிய தலைவர் நியமனம்.!

மேலும் இந்நிறுவனம் சொந்த வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்கும் வழிமுறை அறிமுகப்படுத்தியுள்ளது அதைப் பார்ப்போம்.

இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர், மேலும் இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய பிரவுக்கு புதிய தலைவர் நியமனம்.!

மேலும் இந்த வாட்ஸ்ஆப் செயலி மூலம் பகிரப்படும் சில தவறான செய்திகளால் வட மாநிலங்களில் வன்முறை நடப்பது தொடர் கதையாகி உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தொடர்ந்து இந்திய அரசு வலியுறுத்தி வந்தது.

அபிஜித் போஸ்

அபிஜித் போஸ்

இந்நிலையில் பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் அபிஜித் போஸ் என்பவர் வாட்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டு

இவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளது, மேலும் போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ்-ஆப் நிறுவனம் மீது இந்தியா
தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வந்த நிலையில் அபிஜித் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்இந்நிறுவனம் சொந்த வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்கும் வழிமுறை அறிமுகப்படுத்தியுள்ளது அதைப் பார்ப்போம்.

வழிமுறை 1:

வழிமுறை 1:

உங்களது ஸ்மார்ட்போனில் 'Sticker maker for WhatsApp' என்ற செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்

வழிமுறை 2:

வழிமுறை 2:

செயலியை திறந்து, 'Create a new stickerpack' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி நீங்கள் விரும்பும் பேக் மற்றும் ஆத்தர் பெயர்களை பதிவிட வேண்டும்.

வழிமுறை 3:

வழிமுறை 3:

இங்கு டிரே ஐகான் தெரியும், இதை கிளிக் செய்து தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும்.

வழிமுறை 4:

வழிமுறை 4:

அடுத்து 'select file' அல்லது 'take phone' ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். இனி, புகைப்படத்தில் நீங்கள் ஸ்டிக்கர் போன்று பயன்படுத்த விரும்பும் பகுதியை சுற்றி ஒரு கோடிட வேண்டும்.

வழிமுறை 5:

வழிமுறை 5:

ஸ்டிக்கரை பதிவு செய்து பேக்கை சேர்க்க வேண்டும். குறிப்பாக குறைந்தபட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்க வேண்டும். அதிகபட்சம் முப்பது ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும்.

வழிமுறை 6:

வழிமுறை 6:

ஸ்டிக்கர் பேக் பதிவு செய்ய வேண்டும். வேறு யாரேனும் ஸ்டிக்கர் பேக் பயன்படுத்த வேண்டும் எனில், உங்களுக்கு தகவல் கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான பிரத்யேக ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொண்டு, அதனை நண்பர்கள், குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடியும். சொந்த புகைப்படங்களை பயன்படுத்துவதன் மூலம் செயலியில் தனிப்பட்ட அனுபவம் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Names Abhijit Bose as its New India Head: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X