Whatsapp களமிறக்க தயாராகும் 'அந்த' ஒரு சேவை இப்பொது பீட்டா வெர்ஷனில் கிடைக்கிறது!

|

வாட்ஸ்அப் நிறுவனம் பல புதிய அம்சங்களைத் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இன்னும் பல வகையான புதிய அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. அதேபோல் இன்னும் பல சிறப்பான அம்சங்களைக் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் தனது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கி சோதனை செய்து வருகிறது.

வாட்ஸ்அப் self-destructing messages அம்சம்

வாட்ஸ்அப் self-destructing messages அம்சம்

அந்த வரிசையில் அடுத்தபடியாக வாட்ஸ்அப் 'self-destructing messages' செல்ஃப் டெஸ்ட்ரக்டிங் மெசேஜஸ் என்ற புதிய சேவையைச் சோதனை செய்து வருகிறது. இந்த self-destructing messages அம்சமானது பயனர் அனுப்பும் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தானாக அழித்துவிடும். நீங்கள் அனுப்பும் மெசேஜிற்கான ஆட்டோமேட்டிக் அழிக்கும் நேரத்தையும் நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

சோதனையில் உள்ள டெலீட் மெசேஜ் அம்சம்

சோதனையில் உள்ள டெலீட் மெசேஜ் அம்சம்

வாட்ஸ்அப் இந்த டெலீட் மெசேஜ் அம்சத்தைச் சிறிது காலமாகச் சோதனை செய்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம். இந்த சோதனை அம்சம் எப்போது அனைவருக்கும் கிடைக்கும், எந்த வடிவத்தில் அனைவருக்கும் கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாக நமக்குத் தெரியவில்லை. ஆனால், சோதனை செய்து வரும் மும்முரத்தைப் பார்த்தால் நிச்சயம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ வெடித்தது! காரணத்தை கேட்டு அதிர்ந்து போன உரிமையாளர்!சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ வெடித்தது! காரணத்தை கேட்டு அதிர்ந்து போன உரிமையாளர்!

ஆட்டோமேட்டிக் டெலீட் மெசேஜ்

ஆட்டோமேட்டிக் டெலீட் மெசேஜ்

ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் போன்ற பயன்பாடுகளில் இந்த ஆட்டோமேட்டிக் டெலீட் மெசேஜ் அம்சம் பொதுவாகவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பொதுவான இந்த அம்சத்தை வாட்ஸ்அப் மட்டும் இன்னும் செயல்படுத்தாமல் இருக்கிறது. ஆனால், கூடிய விரைவில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 WABetaInfo என்ன கூறுகிறது?

WABetaInfo என்ன கூறுகிறது?

முதலில் இந்த அம்சத்தை வாட்ஸ்அப், கடந்த அக்டோபரிலிருந்து சோதனை செய்து வருகிறது. ஆனால், அதை குரூப் சாட் அம்சத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தது. தற்பொழுதுள்ள நல்ல செய்தி என்னவென்றால், வாட்ஸ்அப் இப்பொழுது இந்த சேவையை சமீபத்திய பீட்டா வெர்ஷன் மூலம் தனிப்பட்ட கணக்குகளுக்கான செல்ஃப் டெஸ்ட்ரக்டிங் மெசேஜஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று WABetaInfo தெரிவித்துள்ளது.

ஐயன் மேன் கையில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் என்ன மாடல் தெரியுமா?ஐயன் மேன் கையில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் என்ன மாடல் தெரியுமா?

வாட்ஸ்அப் இன் முடிவு என்ன?

வாட்ஸ்அப் இன் முடிவு என்ன?

இன்னும் இந்த சேவை பீட்டா வெர்ஷனில் சோதனையின் கீழ் உள்ளதினால், வாட்ஸ்அப் இதை வெளியிடும் எண்ணத்தை மாற்றி அமைக்குமா? அல்லது இன்னும் சில மாற்றங்களைச் செய்யுமா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட குழு பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த சேவை அனைவருக்கும் கிடைக்குமா என்பதைச் சோதனைக்குப் பின் வாட்ஸ்அப் முடிவு செய்யுமென்று தெரிகிறது.

உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

வாட்ஸ்அப் பீட்டாவை அணுகக்கூடிய ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இப்போது இந்த சேவை பயன்படுத்தக் கிடைக்கிறது. சாட் செட்டிங்ஸ் மெனுவில் இந்த புதிய அம்சத்தை நீங்கள் காணலாம். இதில் டெலீட் மெசேஜஸ் கிளிக் செய்யுங்கள், பின் கீழ கொடுக்கப்பட்டுள்ள OFF, 1 hour, 1 day, 1 week, 1 month, and 1 year என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து உங்கள் மெசேஜ்கள் அளிக்கப்படவேண்டிய கால அவகாசத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Might Launch Self-Destructing Messages Feature Soon At Anytime : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X