Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா? உண்மை என்ன?

|

கொரோனா தொடர்பாகப் பல வதந்திகள் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை அரசாங்கம் கண்காணிக்கிறது என்று ஒரு தகவல் மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அரசாங்கம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்காணிக்கிறதா? இல்லையா? என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அரசாங்கம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்காணிக்கிறதா?

அரசாங்கம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்காணிக்கிறதா?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் வெளிவந்த ஒரு சமீபத்திய செய்தியில் அரசாங்கம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்காணிக்கிறது என்று குறிபிடப்பட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் சாட் பாக்சில் உள்ள மெசேஜ் டிக் மார்க்குகள் இரண்டு ப்ளூ மார்க்குகளாக இல்லாமல், மூன்றாவதாக ஒரு புதிய டிக் மார்க்குகளை நீங்கள் காண நேரிட்டால், மூன்றாவது டிக் மார்க் குறிப்பிட்ட அந்த செய்தியை அரசாங்கம் கவனிக்கிறது என்ற தகவலுடன் அந்த செய்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வருகிறது.

மக்களை பீதி அடைய செய்த சிவப்பு டிக் மார்க்

மக்களை பீதி அடைய செய்த சிவப்பு டிக் மார்க்

அதுமட்டுமின்றி அரசாங்கம் கவனித்து வரும் உங்கள் மெசேஜ்களுக்கு சிவப்பு டிக் மார்க் கொடுக்கப்பட்டால் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமென்று வேற புதிதாக வதந்திகள் பரவலாகப் பரவி வருகிறது. இந்த தகவல் பின்னால் உள்ள உண்மை என்ன என்று ஆராய்ந்த போது, நமக்கு கிடைத்த உண்மை தகவல் என்னவென்றால்.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

தெளிவுபடுத்தப்பட்ட உண்மை

தெளிவுபடுத்தப்பட்ட உண்மை

PIB Fact Check's தனது டிவிட்டர் தளத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளது, வாட்ஸ்அப் செய்திகளை அரசாங்கம் கண்காணிப்பது தொடர்பான வதந்திகளைக் குறித்துத் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வரும் தவறான மெசேஜ் இல் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால்,

மக்களை நம்ப வைத்த போலி மெசேஜ் இல் கூறப்பட்டது இதுதான்

2 நீலம் + 1 சிவப்பு டிக் மார்க் காணப்பட்டால், அரசாங்கம் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறுகிறது.
1 நீலம் + 2 சிவப்பு டிக் மார்க் காணப்பட்டால், உங்கள் தரவை அரசாங்கம் கண்காணிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
3 சிவப்பு டிக் மார்க் காணப்பட்டால், அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது மற்றும் அனுப்புநருக்கு நீதிமன்றத்திலிருந்து சம்மன் கிடைக்கும் என்று கூறுகிறது.

இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!

டிக் மார்க் விபரங்கள் அனைத்துமே பொய்

டிக் மார்க் விபரங்கள் அனைத்துமே பொய்

முதலில் இந்த டிக் மார்க் விபரங்கள் அனைத்துமே பொய் என்பதை நன்றாக அறிந்துகொள்ளுங்கள். இப்படி உங்கள் மெசேஜ்களை அரசாங்கம் கண்காணிக்கவில்லை என்பதே அதிகாரப்பூர்வ உண்மை. போலி தகவல்களைப் பரப்ப எளிதான வழிகளில் ஒன்றாக இன்று வாட்ஸ்அப் மாறிவிட்டது. கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருவதால், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை ஆராய்ந்து பார்க்காமல் பலரும் எளிதில் ஷேர் செய்து வருகின்றனர்.

புதிய வாட்ஸ்அப் மெசேஜ் ஃபார்வேர்டு கட்டுப்பாடு

புதிய வாட்ஸ்அப் மெசேஜ் ஃபார்வேர்டு கட்டுப்பாடு

முதலில் நம்பகத்தன்மை இல்லாத எந்த செய்தியையும் பகிர வேண்டாம் என்று அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது மக்களுக்கு உதவவில்லை என்றாலும், அவர்களை பீதி அடைய செய்யாமல் இருக்க உதவும். போலி தகவல்களை பரப்புவதை மற்றும் அனுப்புவதைத் தடுக்க, வாட்ஸ்அப் மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

OnePlus வயர்லெஸ் சார்ஜரில் கிடைக்கும் அந்த அம்சம் என்னவென்று தெரியுமா?OnePlus வயர்லெஸ் சார்ஜரில் கிடைக்கும் அந்த அம்சம் என்னவென்று தெரியுமா?

அரசாங்கத்தின் கழுகு பார்வைக்குள் நீங்கள் இல்லை

அரசாங்கத்தின் கழுகு பார்வைக்குள் நீங்கள் இல்லை

கோவிட்-19 குறித்த தவறான தகவல்கள் பரப்புவதைத் தடுக்கும் முயற்சியாக இனி ஒரு சாட்டிற்கு மட்டுமே ஒருமுறை ஃபார்வேர்டு அனுப்ப முடியும் என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான போலி செய்திகளை தடுப்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கழுகு பார்வைக்குள் உங்கள் வாட்ஸ்அப் சாட் எதுவும் சிக்கவில்லை என்பதே உண்மை. போலி செய்திகளை பரப்பாமல் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.

Best Mobiles in India

English summary
Whatsapp messages Are Actively Being Monitored By Government Officials Is It True : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X