வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!

|

வாட்ஸ் ஆப் சேவையை விரைவில் ஒரே நேரத்தில் பல சாதனங்களில் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள், வாட்ஸ் ஆப் தற்பொழுது புதிய சேவை ஒன்றை சோதனை செய்து வருகிறது அது என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

சிங்கள் டிவைஸ் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்

சிங்கள் டிவைஸ் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்

உங்கள் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை உங்களால் தற்பொழுது ஒரே ஒரு சாதனத்தில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். உங்களின் பழைய சாதனத்திலோ அல்லது வேறு நபரின் சாதனத்தில் உங்கள் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை பயன்படுத்த முயன்றால் அது நடக்காத காரியமாகும்.

பல சாதனங்களில் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்

பல சாதனங்களில் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்

இனி அந்த கவலை வேண்டாம், உங்களின் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை உங்களுக்குத் தேவையான சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான புதிய சேவையை தான் வாட்ஸ் ஆப் தற்பொழுது சோதனை செய்து வருகிறது. இப்போது நிச்சயம் சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரத்தியேக அனுமதி

பிரத்தியேக அனுமதி

ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்ற கேள்வி நிச்சயம் எழுந்திருக்கும். உங்களுடைய சாட்கள் அனைத்தும் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதற்குப் பிரத்தியேக அனுமதியை, உங்கள் பயன்பாட்டில் உள்ள சாதனங்களுக்கு மட்டும் வாட்ஸ் ஆப் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இன்னும் பல சேவைகள்

இன்னும் பல சேவைகள்

இதேபோல் வாட்ஸ் ஆப் இன்னும் சில புதிய சேவைகளில் தற்பொழுது சோதனை செய்து வருகிறது. அதில் குறிப்பாக மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை ஹைடு செய்யும் ஆப்ஷன், ஸ்பிளாஷ் ஸ்கிரீன் சேவை மற்றும் ஆப் பேட்ஜ் இம்ப்ரூவ்மென்ட் சேவை போன்ற சேவைகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று வாட்ஸ் ஆப் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp May Soon Work on Multiple Devices at the Same Time : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X