தவறுதலாக வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

|

நீண்ட காலமாக நாம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவசியமானதாகவும் எதிர்பார்த்த வசதி வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி

வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுந்தகவல்களை ரீகால் செய்யு்ம வசதி வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதியை சோதனை செய்து வருவதாகவும் இந்த அம்சம் டெலீட் ஃபார் எவ்ரிஒன் (Delete for Everyone) என அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 1: வாய்ஸ் கால் கட்டணம் குறையும்.!அக்டோபர் 1: வாய்ஸ் கால் கட்டணம் குறையும்.!

வாட்ஸ்அப் ஒரு வழியாக டெலீட் ஃபார் எவ்ரி ஒன் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. சர்வெர்களில் இந்த அம்சம் வெற்றிகரமாக வேலை செய்கிறது. சர்வெர் ஒழுங்காக வேலை செய்தாலும், செயலியில் அமலாக சில காலம் ஆகும் என்றும் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் ரீகால் அல்லது ரிவோக் பட்டன் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும். இத்துடன் ரீகால் அம்சம் அனைத்து வகையான குறுந்தகவல்கள் ஜிஃப், வீடியோ, டெக்ஸ்ட், டாக்குமென்ட் உள்ளிட்டவற்றை அழிக்கும் என கூறப்படுகிறது. எனினும் குறுந்தகவல் அனுப்பப்பட்ட ஐந்து நிமிடம் வரை மட்டுமே அவற்றை அழிக்க முடியும்.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இந்த அம்சம் நீக்கப்பட்டு மீண்டும் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுக்க சுமார் 120 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட் மூலம் புதிய அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் புதிய வசதி வழங்கப்பட இருப்பதை வாட்ஸ்அப் உறுதி செய்தது.

Best Mobiles in India

Read more about:
English summary
After you decide to recall your message on WhatsApp, it will not be displayed on the recipient's notification area.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X