ஹேக்கிங் ஆபத்தில் வாட்ஸ் அப்: அதிர்ச்சி தகவல்.!

நாம் அனுப்பும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் வேறு வகையில் பாதுகாப்பின்றி மாற வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

|

வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் மெசேஜ்கள் ஹெக்கர்களால் வழிமறுக்கப்பட்டு அதற்கு பதிலாக போலியான மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்யும் அபாயம் வாட்ஸ் அப்ப்பில் இருப்பதாக கடந்த புதன் அன்று இஸ்ரேல் நாட்டின் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹேக்கிங் ஆபத்தில் வாட்ஸ் அப்: அதிர்ச்சி தகவல்.!

வாட்ஸ் அப்பில் ஒருவர் அனுப்பும் மெசேஜ் அல்லது ஒரு குரூப்பில் இருந்து அனுப்பப்படும் மெசேஜ்களை ஹேக்கர்கள் முறைகேடாக நிறுத்தவும், அதற்கு பதிலாக வதந்திகள் மற்றும் பயமுறுத்தும் மெசேஜ்களை அனுப்பி ஆபத்தை விளைவிக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ் அப் நிறுவனம் இந்த அறிவிப்பால் பயனாளிகளால் அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், நாம் அனுப்பும் மெசேஜ்கள் வேறு வகையில் பாதுகாப்பின்றி மாற வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

20 அப்பாவிகள்

20 அப்பாவிகள்

கடந்த மாதம் இந்தியாவில் போலி வாட்ஸ் அப் மெசேஜ்களை நம்பி சுமார் 20 அப்பாவிகள் குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகப்பட்டு கொல்லப்பட்டதும், இதுபோன்ற ஒரு ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதற்கு பின்னர் இந்நிறுவனம் மெசேஜ்களை பார்வேர்டு செய்வதில் சில ஒழுங்கு முறைகளை அறிவித்தது.

மெசேஜ்

மெசேஜ்

இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் மிக கவனமாக இந்த பிரச்சனையை கையாளுகின்றோம். ஒரு மெயிலில் அனுப்பும் மெசேஜ்களுக்கு உரிய பாதுகாப்பு வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கும் கிடைக்கும் வகையில் தாங்கள் ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளது.

 'எண்ட் டு எண்ட்'

'எண்ட் டு எண்ட்'

மேலும் வாட்ஸ் அப்பில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தொழில்நுட்பமான 'எண்ட் டு எண்ட்' பாதுகாப்பு மூலம் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் தவிர மெசேஜ்களை யாரும் படிக்க முடியாத அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.

சமீபத்தில் மெசேஜ்களை பார்வேர்டு செய்வதில் ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளதாகவும், இது ஒரு மிகப்பெரிய, சீரியஸான மாற்றம் என்றும், சேட்டிங் மற்றும் பார்வேர்ட் மெசேஜ் மூலம் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க வைக்க தங்களுக்கான ஒரு சவால் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

1.5 பில்லியன்

1.5 பில்லியன்

கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட இந்த வாட்ஸ் அப் நிறுவனம் மேலும் கூறியபோது, ஆரம்பத்தில் 1.5 பில்லியன் வாடிக்கையாளர்கள் தினமும் 65 பில்லியன்களை மெசேஜ்களை பரிமாறி கொண்டதாக தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp may be prone to hacking attacks: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X