வாட்ஸ் அப் செயலியில் விரைவில் 'பூமராங்' போன்ற வசதி!

|

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் அவ்வப்போது பயனாளிகளுக்கு சில சிறப்பு வசதிகளை செய்து தருகின்றது என்பது தெரிந்ததே.

வாட்ஸ் அப் செயலியில் விரைவில் 'பூமராங்' போன்ற வசதி!

சமீபத்தில் கூட பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளில் இருந்து தப்பிக்கும் வகையில் வாட்ஸ் அப் ஒரு வசதியை செய்து கொடுத்தது என்பதும் உலகம் முழுவதும் இந்த வசதி பெரும் பயனை கொடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் ஒரு புதிய வசதியை செய்து கொடுத்துள்ளது. அதுதான் இன்ஸ்டாகிராம் செயலிக்காக உங்களால் ஒரு சிறிய வீடியோவை செய்து கொள்ளலாம் என்பதுதான்.

இன்ஸ்டாகிராமில் இருக்கும் பூமராங் வசதி போன்றது தான்

இன்ஸ்டாகிராமில் இருக்கும் பூமராங் வசதி போன்றது தான்

இந்த வசதி ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் இருக்கும் பூமராங் வசதி போன்றது தான். இன்ஸ்டாகிராமில் பூமராங் மூலம் சின்னச்சின்ன வீடியோக்களை உருவாக்கி நண்பர்களுக்கு அனுப்பும் அனுபவம் பலருக்கு இருந்திருக்கலாம். பூமராங் இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு ஒரு பயனுள்ள வசதி. கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு வசதியை வாட்ஸ் அப் தற்போது தங்களது பயனாளிகளுக்கு அளித்துள்ளது.

பிரச்சனைகள் ஏற்படுமா?

பிரச்சனைகள் ஏற்படுமா?

இந்த புதிய பூமராங் வசதி தற்போது வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு சில பிரச்சனைகள் ஏற்படுமா? என்பது குறித்து வாட்ஸ் அப் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றானர். எந்தவித பிரச்சனையும் இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டால் பின்னர் அது பயனாளிகளுக்கு தோன்றும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.

அசத்தலான எல்ஜி கே20 ஸ்மார்ட்போன் அறிமுகம்: (விலை மற்றும் அம்சங்கள்).!அசத்தலான எல்ஜி கே20 ஸ்மார்ட்போன் அறிமுகம்: (விலை மற்றும் அம்சங்கள்).!

 7 வினாடிகள் ஜிஃப் பைலாக ஒரு வீடியோவை மாற்றலாம்

7 வினாடிகள் ஜிஃப் பைலாக ஒரு வீடியோவை மாற்றலாம்

வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு இதுவொரு வீடியோ டைப் வசதியாக மாற்றப்படவுள்ளது. இந்த புதிய பூமராங் போன்ற வசதியால் வீடியோவை ஒருசில நொடிகள் மட்டுமே தோன்றும் ஜ்ஃப் பைலாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதாவது 7 வினாடிகள் ஜிஃப் பைலாக ஒரு வீடியோவை மாற்றலாம். இதனால் இந்த வசதி கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் இருக்கும் பூமராங் வசதிக்கு இணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் அருகில் தோன்றிய ஏலியன் விண்கலம்!இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் அருகில் தோன்றிய ஏலியன் விண்கலம்!

பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்

பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்

மேலும் வீடியோவை ஏழு வினாடிகள் கொண்ட ஜிஃப் பைலாக மாற்றிய பின்னர் அதனை நம்முடைய மொபைல் காண்டாக்டில் உள்ள நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வசதியும் கிடைக்கும். இந்த வசதி வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு மிக விரைவில் கிடைக்கவுள்ளது என்பதும், இந்த வசதி வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 விரைவில் இன்னொரு புதிய வசதி

விரைவில் இன்னொரு புதிய வசதி

வாட்ஸ் அப்பில் இந்த வசதி போக விரைவில் இன்னொரு புதிய வசதியும் பயனாளிகளுக்கு கிடைக்கவுள்ளது. அதாவது வாட்ஸ் அப் டெவலப்பர்கள் தற்போது மூன்றாம் பார்ட்டிகளின் ஸ்டிக்கர்களை வெப் வெர்ஷனில் பயன்படுத்துவது குறித்த முயற்சியில் உள்ளனர்.

UWP வெர்ஷனில் செயல்படும்

UWP வெர்ஷனில் செயல்படும்

முன்னதாக, வரவிருக்கும் இந்த புதிய அம்சம் பயனர்களை ஒரே சாதனத்தை பல விஷயங்களை பயன்படுத்த அனுமதிக்கும் என்று ஒரு செய்தியை பார்த்தோம் என்பது ஞாபகம் இருக்கலாம். இந்த புதிய வசதி UWP வெர்ஷனில் செயல்படும். மேலும் வாட்ஸ் அப் செயலி நம் நாட்டிற்கு விரைவில் கட்டணம் குறித்த அறிவிப்பையும் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp Likely Working On Boomerang-Like Feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X