வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கைள சேர்த்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய அப்டேட்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

 க்ரூப் சாட் பயனாளர்களுக்கான அப்டேட்

க்ரூப் சாட் பயனாளர்களுக்கான அப்டேட்

இந்நிலையில் வாட்ஸ்ஆப்-ல் க்ரூப் சாட் பயனாளர்களுக்கான அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் தேவையில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்க வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 குழுவில் இணைய

குழுவில் இணைய

தற்சமயம் க்ரூப் சாட்-களுக்காக ‘My Contacts Except'என்னும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படிவாட்ஸ்ஆப் செயலியில் உள்ள குழுவில் இணைய பயனாளர்கள் ‘Everyone', ‘My Contacts'மற்றும் nobody ஆகிய அம்சங்களில் எதேனும் ஒன்றை தேர்வுசெய்யலாம்.

ரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.!ரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.!

கான்டாக்ட்ஸ் பட்டியலில் இருப்பபோர்

கான்டாக்ட்ஸ் பட்டியலில் இருப்பபோர்

இதில் யார் வேண்டுமானலும் உங்களை ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கலாம் என்றால் Everyone அம்சமும்,உங்களது கான்டாக்ட்ஸ் பட்டியலில் இருப்பபோர் மட்டும் என்றால் My Contacts என்ற அம்சத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம்.

தரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!தரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

காலாவதி ஆகிவிடும்

காலாவதி ஆகிவிடும்

குறிப்பாக 'Nobody' என்ற அம்சத்தை நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்கு க்ரூப்-ல் இணைய invite வரும், ஆனால் மூன்று நாட்களில் அந்த அழைப்பு காலாவதி ஆகிவிடும்.

உங்களை நேரடியாக ஒரு குழுவில் இணைக்க முடியாது

உங்களை நேரடியாக ஒரு குழுவில் இணைக்க முடியாது

இந்த புதிய அப்டேட்டில் Nobody என்னும் அம்சம் My Contacts Expect என்று இணைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் உங்களுக்கு தேவையில்லாதோரை நீங்கள் தேர்வு செய்து, அவர்கள் உங்களை ஒரு குழுவில் இணைக்க இயலாதவாறு ப்ளாக் செய்துகொள்ளலாம். இதன் மூலம் உங்களை நேரடியாக ஒரு குழுவில் இணைக்க முடியாது

கரூப் இன்வைட்

கரூப் இன்வைட்

மேலும் உங்களுக்கு வரும் கரூப் இன்வைட் மூலம் தேவையானவற்றில் நீங்கள் இணைந்துகொள்ள முடியும். தற்சமயம் வரை iOS 2.19.110.20 மற்றும் Android பீட்டா 2.19.298 பதிப்புகளுக்கு இந்த அம்சம் கிடைத்துள்ளது, விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்

வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்

ஏற்கெனவே சோதனையில் உள்ள ஒரு அப்டேட் தான் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ். குறிப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் பே சர்வீஸ், பேடிஎம் மறறும் கூகுள் போல செயல்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வருடங்களாக சோதனை முயற்சியில் இருக்கும் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன

Best Mobiles in India

English summary
WhatsApp Lets You Control Who Can Add You To Groups: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X