Home
Apps

இப்படி ஒரு அப்டேட் யாருமே எதிர்பார்க்கல...இன்ப அதிர்ச்சியில் WhatsApp பயனர்கள்.!

டெலிகிராம் செயலிக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் குரூப் கால்

குறிப்பாக வாட்ஸ்அப் குரூப் கால் வசதியில் இந்த புதிய அம்சம் வர உள்ளது. அதாவது நமது நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பேச முன்பே குறிப்பிட்ட நேரத்தை schedule செய்து வைத்து அனைவரையும் ஒரு சேர தொடர்பு கொண்டு பேசலாம். குறிப்பாக இது schedule group calls என்று கூறப்படுகிறது.

WhatsApp செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்.! என்ன தெரியுமா

பீட்டா பயனர்களுக்கு..

இந்த புதிய அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் உள்ள கால் பட்டன் கிளிக் செய்யும் போது Schedule Call பட்டன் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். இதில் சென்று எப்போது குரூப் கால் தொடங்க வேண்டும்? யார் எல்லாம் குரூப் காலில் இருக்க வேண்டும் என்று தேர்வு செய்து கொள்ளலாம்.

இதுதவிர கூடுதல் அம்சமாக குரூப் கால் வசதிக்குப் பெயர் வைத்துக் கொள்ளும்படி அப்டேட் வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சங்கள் அனைத்தும் சோதனையில் உள்ளதாகவும், விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் பயனுள்ள வகைகளில் இருக்கும் என்றே கூறலாம். மேலும் வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கும் ஒரு புதிய அம்சம் கிடைக்கும்.

WhatsApp செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்.! என்ன தெரியுமா

புகைப்படங்கள்

அதாவது வாட்ஸ்அப் வெப் பயனர்கள் கூடிய விரைவில் புகைப்படங்களை அதன் ஓரிஜனல் தரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். குறிப்பாக மற்ற சோஷியல்-ஷேரிங் செயலிகளுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் வாட்ஸ்அப் இந்த புதிய வசதியை வழங்க உள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வெப் வெர்ஷன்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து WABetaInfo வெளியிட்டுள்ள தகவல் என்னவென்றால், இந்த புதிய வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த வசதியைக் கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜனல் ரெசல்யூஷனில் ஷேர் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்.! என்ன தெரியுமா

குறிப்பாக இந்த புதிய வசதி மூலம் மற்றவர்களுக்குப் புகைப்படங்களைத் தரம் குறையாமல் அனுப்ப முடியும். அதேசமயம் அப்லோடு நேரத்தைக் குறைக்கவும், அதிக ஸ்பேஸ் எடுக்கப்படுவதைத் தவிர்க்கவும், தற்போது இருக்கும் கம்ப்ரெஸ்டு வெர்ஷன் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்.! என்ன தெரியுமா

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான புதிய அம்சங்களைக் கொண்டுவர உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் டெலிகிராம் செயலியும் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. ஆனாலும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் அம்சங்களுக்குத் தான் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Lets Users Schedule Group Calls Soon : Let's take a closer look at how it works : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X