வாட்ஸ்ஆப்: போலி செய்திகளை முடக்க புதிய திட்டம்.!

முன்பு தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் போலி தகவல்கள்பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இந்த புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலியை கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப்: போலி செய்திகளை முடக்க புதிய திட்டம்.

முன்பு தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறவனம் தகவல் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்: போலி செய்திகளை முடக்க புதிய திட்டம்.

விரைவில் பொதுத் தேர்தல் துவங்க இருப்பதையொட்டி, வாட்ஸ்ஆப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகளில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேர்தல் நடைபெற எவ்வித சிரமும் இருக்காது என உறுதிப்படுத்தியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

வாட்ஸ்ஆப்: போலி செய்திகளை முடக்க புதிய திட்டம்.

மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களின் முக்கிய நோக்கம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சமயம் போலிதகவல்கள் வந்தால் அவற்றை எப்படி கண்டறிவது பற்றிய விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்பை அதிகப்படுத்த முடியும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவரட அபிஜித் போஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான வீடியோக்களை வாட்ஸ்ஆப் உடன் இணைந்திருக்கும் நாஸ்காம் மற்றும் டி.இ.எஃப். மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன என அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் வீடியோக்களில் போலி விவரங்கள் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பும் போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வாட்ஸ்ஆப்: போலி செய்திகளை முடக்க புதிய திட்டம்.

விரைவில் இதேபோன்று பல்வேறு புதிய அம்சங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஃபார்வேடு செய்யும் குறுந்தவல்கள் அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது. அதுவும் ஒருவர் அதிகபட்சம் ஃபார்வேர்டு செய்யும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp launches second campaign to fight fake news ahead of India’s elections: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X